»   »  பிரஷாந்த் கல்யாணம்: ஜெ. தலைமை- ஐஸ் வருகை நடிகர் பிரஷாந்த்துக்கு செப்டம்பர் 1ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. முதல்வர் ஜெயலலிதா தலைமை தாங்கி திருமணத்தை நடத்திக் கொடுக்கவுள்ளார்.இந்தத் திருமணத்துக்கு ஐஸ்வர்யா ராயும் வருகிறாராம்.பிரஷாந்த்துக்கும், சென்னை தி.நகரைச் சேர்ந்த கிரகலட்சுமிக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது. இவர்களது திருமணம் சென்னையில் நடைபெறும் எனஅறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் திருமண தேதி அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது.இந் நிலையில் சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதாவை பிரஷாந்த்தும், அவரது தந்தை தியாகராஜனும் சென்று சந்தித்துப் பேசினர். அப்போது திருமணத்தைஜெயலலிதா தலைமை தாங்கி நடத்தித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதற்கு ஜெயலலிதா சம்மதம் தெவித்ததாக தெரிகிறது.இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கும் தோதான தேதியான செப்டம்பர் 1ம் தேதி திருமணம் நடத்த முடிவாகியுள்ளது. தனது திருமணத்துக்கு மிக முக்கியவிஐபிக்கள் அனைவரையும் அழைத்து வருகிறார் பிரஷாந்த். பிரஷாந்துடன் ஜீன்ஸ் படத்தில் நடித்தபோது மிக நெருக்கமாகிவிட்ட ஐஸ்வர்யா ராயும் இத் திருமணத்துக்கு வருகிறார்.இதுவரை 60 படங்களில் நடித்துள்ள பிரஷாந்துக்கு தமிழில் நிலையான மார்க்கெட் உருவாகவில்லை. இப்போது தகப்பன்சாமி மற்றும் டாக்சி டிரைவர்ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.ஐஸ்வர்யாவில் ஆரம்பித்து கடைசியில் இவருடன் சேர்ந்து நடித்து உமா வரை பலருடனும் இணைத்து கிசுகிசுக்கப்பட்டவர் பிரஷாந்த். ஆனால், எதுவுமேஉண்மையில்லாமல் போய்விட்டது.இந்த நிலையில் தான் சென்னையின் மிகப் பிரபலமான மருத்துவர் டாக்டர் ரங்கபாஷ்யத்தின் மூலமாக கிரலட்சுமியின் வரன் வந்தது. இவரது தந்தைகார்மெண்ட் எக்ஸ்போர்ட்ஸ் பிஸினஸ் செய்து வருகிறார்.கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியான இவரது ஒரே மகளான கிரகலட்சுமி படித்தது, வசிப்பதும் சென்னையில் தானாம்.திருமணத்துக்கு பின் தேனிலவுக்காக ஹவாய் தீவுகளுக்குப் போக இருக்கிறதாம் பிரஷாந்த்-கிரகலட்சுமி ஜோடி.

பிரஷாந்த் கல்யாணம்: ஜெ. தலைமை- ஐஸ் வருகை நடிகர் பிரஷாந்த்துக்கு செப்டம்பர் 1ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. முதல்வர் ஜெயலலிதா தலைமை தாங்கி திருமணத்தை நடத்திக் கொடுக்கவுள்ளார்.இந்தத் திருமணத்துக்கு ஐஸ்வர்யா ராயும் வருகிறாராம்.பிரஷாந்த்துக்கும், சென்னை தி.நகரைச் சேர்ந்த கிரகலட்சுமிக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது. இவர்களது திருமணம் சென்னையில் நடைபெறும் எனஅறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் திருமண தேதி அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது.இந் நிலையில் சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதாவை பிரஷாந்த்தும், அவரது தந்தை தியாகராஜனும் சென்று சந்தித்துப் பேசினர். அப்போது திருமணத்தைஜெயலலிதா தலைமை தாங்கி நடத்தித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதற்கு ஜெயலலிதா சம்மதம் தெவித்ததாக தெரிகிறது.இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கும் தோதான தேதியான செப்டம்பர் 1ம் தேதி திருமணம் நடத்த முடிவாகியுள்ளது. தனது திருமணத்துக்கு மிக முக்கியவிஐபிக்கள் அனைவரையும் அழைத்து வருகிறார் பிரஷாந்த். பிரஷாந்துடன் ஜீன்ஸ் படத்தில் நடித்தபோது மிக நெருக்கமாகிவிட்ட ஐஸ்வர்யா ராயும் இத் திருமணத்துக்கு வருகிறார்.இதுவரை 60 படங்களில் நடித்துள்ள பிரஷாந்துக்கு தமிழில் நிலையான மார்க்கெட் உருவாகவில்லை. இப்போது தகப்பன்சாமி மற்றும் டாக்சி டிரைவர்ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.ஐஸ்வர்யாவில் ஆரம்பித்து கடைசியில் இவருடன் சேர்ந்து நடித்து உமா வரை பலருடனும் இணைத்து கிசுகிசுக்கப்பட்டவர் பிரஷாந்த். ஆனால், எதுவுமேஉண்மையில்லாமல் போய்விட்டது.இந்த நிலையில் தான் சென்னையின் மிகப் பிரபலமான மருத்துவர் டாக்டர் ரங்கபாஷ்யத்தின் மூலமாக கிரலட்சுமியின் வரன் வந்தது. இவரது தந்தைகார்மெண்ட் எக்ஸ்போர்ட்ஸ் பிஸினஸ் செய்து வருகிறார்.கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியான இவரது ஒரே மகளான கிரகலட்சுமி படித்தது, வசிப்பதும் சென்னையில் தானாம்.திருமணத்துக்கு பின் தேனிலவுக்காக ஹவாய் தீவுகளுக்குப் போக இருக்கிறதாம் பிரஷாந்த்-கிரகலட்சுமி ஜோடி.

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் பிரஷாந்த்துக்கு செப்டம்பர் 1ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. முதல்வர் ஜெயலலிதா தலைமை தாங்கி திருமணத்தை நடத்திக் கொடுக்கவுள்ளார்.இந்தத் திருமணத்துக்கு ஐஸ்வர்யா ராயும் வருகிறாராம்.

பிரஷாந்த்துக்கும், சென்னை தி.நகரைச் சேர்ந்த கிரகலட்சுமிக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது. இவர்களது திருமணம் சென்னையில் நடைபெறும் எனஅறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் திருமண தேதி அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது.

இந் நிலையில் சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதாவை பிரஷாந்த்தும், அவரது தந்தை தியாகராஜனும் சென்று சந்தித்துப் பேசினர். அப்போது திருமணத்தைஜெயலலிதா தலைமை தாங்கி நடத்தித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதற்கு ஜெயலலிதா சம்மதம் தெவித்ததாக தெரிகிறது.

இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கும் தோதான தேதியான செப்டம்பர் 1ம் தேதி திருமணம் நடத்த முடிவாகியுள்ளது. தனது திருமணத்துக்கு மிக முக்கியவிஐபிக்கள் அனைவரையும் அழைத்து வருகிறார் பிரஷாந்த்.


பிரஷாந்துடன் ஜீன்ஸ் படத்தில் நடித்தபோது மிக நெருக்கமாகிவிட்ட ஐஸ்வர்யா ராயும் இத் திருமணத்துக்கு வருகிறார்.

இதுவரை 60 படங்களில் நடித்துள்ள பிரஷாந்துக்கு தமிழில் நிலையான மார்க்கெட் உருவாகவில்லை. இப்போது தகப்பன்சாமி மற்றும் டாக்சி டிரைவர்ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

ஐஸ்வர்யாவில் ஆரம்பித்து கடைசியில் இவருடன் சேர்ந்து நடித்து உமா வரை பலருடனும் இணைத்து கிசுகிசுக்கப்பட்டவர் பிரஷாந்த். ஆனால், எதுவுமேஉண்மையில்லாமல் போய்விட்டது.

இந்த நிலையில் தான் சென்னையின் மிகப் பிரபலமான மருத்துவர் டாக்டர் ரங்கபாஷ்யத்தின் மூலமாக கிரலட்சுமியின் வரன் வந்தது. இவரது தந்தைகார்மெண்ட் எக்ஸ்போர்ட்ஸ் பிஸினஸ் செய்து வருகிறார்.

கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியான இவரது ஒரே மகளான கிரகலட்சுமி படித்தது, வசிப்பதும் சென்னையில் தானாம்.

திருமணத்துக்கு பின் தேனிலவுக்காக ஹவாய் தீவுகளுக்குப் போக இருக்கிறதாம் பிரஷாந்த்-கிரகலட்சுமி ஜோடி.


சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil