டாப் ஸ்டார் பிரசாந்த் பிறந்தநாள்.. அவரோட அடுத்த பட டைட்டில் என்ன தெரியுமா?.. தேவயானி மகள் ஹீரோயின்!
சென்னை: நடிகர் பிரசாந்தின் 53வது பிறந்தநாள் இன்று அவரது அடுத்த பட டைட்டில் அறிவிப்புடன் கொண்டாடப்பட்டுள்ளது. வெற்றிமாறன், கலைப்புலி எஸ். தாணு, கே.எஸ். ரவிகுமார், தேவயானி உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த டைட்டில் அறிவிப்பு விழாவில் பங்கேற்றனர்.
தெலுங்கில் கடந்த ஆண்டு ராம் ஜெகதீஷ் இயக்கத்தில் பிரியதர்ஷி புலிகொண்டா நடிப்பில் வெளியான Court: State vs a Nobody திரைப்படத்தைத் தான் பிரசாந்த் அடுத்ததாக ரீமேக் செய்து நடிக்கப் போகிறார் என்கிற தகவல்கள் ஏற்கனவே கசிந்தன.

அந்தகன் படத்தைத் தொடர்ந்து இந்த படத்தையும் பிரசாந்தின் அப்பா தியாகராஜன் தான் இயக்குகிறார். இந்த படத்தில் தேவயானி மகள் பிரியங்கா மற்றும் தயாரிப்பாளர் கதிரேசனின் மகன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
டாப்ஸ்டார் பிரசாந்த் பிறந்தநாள்: ஒரு சிறிய கேப்பிற்கு பிறகு நடிகர் பிரசாந்த் விஜய்யின் கோட் படத்தில் நண்பராக நடித்து அசத்தினார். மேலும், அந்தாதூன் படத்தின் ரீமேக்கான அந்தகன் படத்தில் ஹீரோவாக நடித்து கம்பேக் கொடுத்தார். பிரியா ஆனந்த், சிம்ரன், கார்த்தி, சமுத்திரகனி, கே.எஸ். ரவிகுமார், உள்ளிட்ட பலர் அந்த படத்தில் நடித்தனர். அதன் பிறகு ஹரி இயக்கத்தில் பிரசாந்த் நடிக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், அந்த படத்திற்கு முன்னதாக கோர்ட் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார் பிரசாந்த். 53வது பிறந்தநாள் விழாவை புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு விழாவாக மாற்றியுள்ளார்.
டைட்டில் என்ன?: தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடிக்கும் புதிய படத்திற்கு 'ரஞ்சன்' The Advocate என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பிரசாந்த் ரஞ்சன் எனும் வழக்கறிஞராக நடித்து வருகிறார் என்பது டைட்டிலை பார்த்தாலே புரிந்து விடுகிறது. தெலுங்கில் வெறும் 5 கோடி ரூபாயில் உருவான கோர்ட் திரைப்படம் 58 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்தகன் படத்தைத் தொடர்ந்து நடிகர் பிரசாந்துக்கு அடுத்த படமும் வெற்றிப் படமாக அமைய வேண்டும் என்பதற்காக அந்த படத்தின் ரைட்ஸ் வாங்கி தியாகராஜன் ரஞ்சன் படத்தை இயக்கி வருகிறார்.

தேவயானி மகள்: கோர்ட் படம் பார்த்தவர்களுக்கு அந்த படத்தில் ஸ்ரீதேவி நடித்த ஜாபிலி கதாபாத்திரம் மிகவும் பிடித்திருக்கும். அந்த கதாபாத்திரத்தில் தான் தமிழில் தேவயானியின் மகள் பிரியங்கா ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார். மேலும், தயாரிப்பாளர் கதிரேசனின் மகன் கிருத்திக் இந்த படத்தில் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். கிருத்திக் மற்றும் பிரியங்கா ஜோடியின் பிரச்னையை தீர்த்து வைக்கும் வழக்கறிஞர் ரஞ்சனாக பிரசாந்த் கலக்க காத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











