பிரேம்ஜியின் கல்யாண சாப்பாடு.. ஆயிரம் வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் அதிசயம்.. ஜெய் அலப்பறை!

சென்னை: நடிகர், பாடகர் மற்றும் இசையமைப்பாளரான பல திறமைகளைக்கொண்ட பிரேம்ஜிக்கு கடந்த ஆண்டு ஜூன் 9ந் தேதி திருத்தணியில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். பிரேம்ஜி நேற்று தனது முதல் திருமண நாளை கொண்டாடி உள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை சொல்லிய நிலையில், நடிகர் வைபவ், அலப்பறையான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரேம்ஜி அமரன், 2003 ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் நடிகராக இருந்து வருகிறார். 2005 ஆம் ஆண்டு வெளியான "நியாபகம் வருதே" படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் பல தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். பாடகராகவும் பல வெற்றி பெற்ற பாடல்களை பாடியுள்ளார். பிரேம்ஜியின் அண்ணன் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் பிரேம்ஜி கட்டாயம் நடித்து விடுவார்கள். வெங்கட் பிரபுவிற்கு திருமணமாகி ஒரு மகள் இருக்கிறாள். ஆனால், பிரேம்ஜிக்க 45 வயதான போதும், திருமணம் செய்து கொள்ளாமல், முரட்டு சிங்கிளாக சுற்றிக்கொண்டு இருந்தார்.

Premgi wedding anniversary
Photo Credit:

பிரேம்ஜி அமரன்: இதையடுத்து கடந்த ஆண்டு திருத்தணியில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன் இந்து என்பவர் திருமணம் செய்து கொண்டார். திருத்தணியில் நடைபெற்ற திருமணத்தில் தந்தை கங்கை அமரன், வெங்கட் பிரபு, நடிகர்கள் ஜெய், வைபவ், பாடகர் கிருஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்து வங்கியில் பணிபுரிந்து வருவதாகவும், அந்த வங்கிக்கு பிரேம்ஜி அடிக்கடி செல்ல, அது காதலாக மாறிவிட்டதாக பிரேம்ஜி ஒரு பேட்டியில் கூறியிருந்தார். பிரேம்ஜி மற்றும் அவரது மனைவி இந்துவும் சேர்ந்து, பிரேம்ஜி மாமியார் மசாலா என்ற பெயரில் மசாலா தயாரித்து வருகின்றனர். இதற்காக விளம்பரத்தில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து நடித்து வருகின்றனர்.

திருமண நாள்: நேற்று இவர்கள் தங்களின் முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடி உள்ள நிலையில், நடிகர் வைபவ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணத்தின் போது அனைவரும் செய்த அலப்பறை வீடியோவை வெளியிட்டுள்ளார். இதில், ஜெய், பிரேம்ஜியின் கல்யாண சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறேன். ஆயிரம் வருடத்திற்கு ஒருமுறை தான் இதுபோன்ற அதிசயம் நடக்கும் என்றார். இதில் நடிகர் சிவா, வெங்கட் பிரபு என அனைவரும் உள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X