எனக்கு 44 உனக்கு 22.. பிரேம்ஜி அமரன் கட்டிக்கப் போற பொண்ணப் பத்தி தெரியுமா?.. என்ன கொடுமை சார்!
சென்னை: The Greatest of All Time படத்தில் நடித்து வரும் நடிகர் பிரேம்ஜி விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக அவரே அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் கங்கை அமரனின் இளைய மகனான பிரேம்ஜி அமரன் 44 வயதாகியும் இன்னமும் திருமணம் செய்துக் கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக வாழ்ந்து வரும் நிலையில், இந்த புத்தாண்டின் ரெசல்யூசனாக இந்த வருடம் கண்டிப்பா கல்யாணம் செய்துக் கொள்வேன் என அறிவித்துள்ளார்.
நடிகர் சிம்புவை போலவே பல ஆண்டுகளாக அவரது நண்பர் பிரேம்ஜியும் திருமணம் செய்துக் கொள்ளாமலே வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் ஒரு இளம் பெண்ணுடன் ஏற்பட்ட காதல் காரணமாக விரைவில் திருமணம் செய்துக் கொள்ளும் முடிவுக்கே வெங்கட் பிரபு வந்து விட்டதாக கூறுகின்றனர்.

வெங்கட் பிரபு தம்பி: 48 வயதாகும் இயக்குநர் வெங்கட் பிரபு 2001ம் ஆண்டு ராஜலக்ஷ்மி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இந்த நட்சத்திர தம்பதியினருக்கு ஷிவானி எனும் அழகிய மகள் உள்ளார். ஆனால், 44 வயதாகும் அவரது தம்பி பிரேம்ஜி இன்னமும் திருமணம் செய்துக் கொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார். கடந்த ஆண்டு அவருக்கு தீவிரமாக பெண் பார்க்கும் படலத்தையும் அப்பா கங்கை அமரன் ஆரம்பித்து இருந்தார். இந்நிலையில், பிரேம்ஜியே ஒரு பெண்ணை பார்த்து விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.
காதல் இனிக்குதய்யா: பிரேம்ஜி இதுவரை தனக்கு ஏற்ற மாதிரி ஒரு பெண்ணை தேடி தேடியே 44 வருடங்களை ஓட்டி விட்டார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ஒரு பெண்ணை சின்சியராக பிரேம்ஜி காதலித்து வருவதாகவும் அவரை தான் அவர் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.
ரெடின் கிங்ஸ்லி திருமணம்: சமீபத்தில் 44 வயதில் காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி சின்னத்திரை நடிகை சங்கீதாவை திருமணம் செய்துக் கொண்டார். இந்நிலையில், 44 வயது தான் புதிய திருமண வயதா என ஷாக் கொடுக்கும் விதமாக பிரேம்ஜி அறிவித்து இருப்பதை பார்த்து ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
22 வயது இளம்பெண்: பிரேம்ஜி சொன்னது புரமோஷனுக்காக இல்லை என்றும் உண்மையாகவே இந்த ஆண்டு தை பிறந்தால் பிரேம்ஜி திருமணம் செய்துக் கொள்ளப் போவது உண்மை என்றும் அந்த பெண்ணின் வயது 22 தான் என்றும் பல வருட இடைவேளை எல்லாம் காதலுக்கு நடுவே ஒன்றும் பெரிதல்ல எனக் கூறுகின்றனர். கூடிய சீக்கிரமே தனது காதலியை அறிமுகப்படுத்தி பிரம்மாண்டமாக பிரேம்ஜி திருமணம் செய்து கொள்வார் என்றும் விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் பங்கேற்க போவதாக கூறுகின்றனர்.
இவர் தான் காதலியா?: பிரேம்ஜி அமரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட சில புகைப்படங்களை ஆராய்ந்து இவர் தான் காதலியா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பின்னணி பாடகி வினைட்டா சிவகுமாரை தான் பிரேம்ஜி காதலித்து வருகிறாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. கூடிய சீக்கிரமே அதிகாரப்பூர்வமாக அவரே அறிவிப்பார் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











