இனிமே யாராச்சும் கல்யாணத்தை பத்தி பேச்சு எடுப்பீங்க?.. சிம்பு வீடியோவை ஷேர் செய்த பிரேம்ஜி!
சென்னை: சிம்பு மற்றும் அவரது நெருங்கிய நண்பரான பிரேம்ஜி இருவரும் இன்னமும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை என ஏகப்பட்ட ட்ரோல் மீம்கள் குவிந்து வருகின்றன. சமீபத்தில், பிரேம்ஜிக்கு பெண் பார்த்தாச்சு என்றும் விரைவில் காதலியை கரம் பிடிக்கப் போகிறார் என தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், திருமணத்துக்கு எங்களை ஏன் அவசரப்படுத்துறீங்க என சிம்பு பேசிய தக் லைஃப் பேட்டி ஒன்றை ஷேர் செய்து சிம்புவையும் டேக் செய்திருக்கிறார் பிரேம்ஜி. அந்த வீடியோவை பார்த்து விட்டு ஏகப்பட்ட ரசிகர்கள் ஸ்மைலி இமேஜ்களை போட்டு கலாய்த்து வருகின்றனர்.

முரட்டு சிங்கிள் சிம்பு: தமிழ் சினிமாவில் அப்பா டி. ராஜேந்தர் இயக்கத்தில் குழந்தை பருவத்திலேயே நடிகராக மாறியவர் சிம்பு. தொடர்ந்து சினிமாவிலேயே வளர்ந்து வந்த அவர் படத்தில் நடிப்பது, பாடல் பாடுவது, எழுதுவது, இசையமைப்பது மற்றும் இயக்குவது என அனைத்து திறமைகளையும் வளர்த்துக் கொண்டார். லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே என பாடி காதல் வளர்த்த சிம்புவுக்கு காதல்கள் கை கூடாத நிலையில், இன்னமும் முரட்டு சிங்கிளாகவே உள்ளார் சிம்பு.
எப்போ திருமணம்: எஸ்டிஆர் 48 படத்துக்காக லாங் ஹேர்லாம் வைத்துக் கொண்டு கமல்ஹாசன் தயாரிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இன்னொரு பக்கம் சிம்புவின் அம்மா உஷா ராஜேந்தர் அவருக்கு தீவிரமாக திருமணத்துக்கு பெண் தேடி வருவதாக கூறுகின்றனர். விரைவில் சிம்புவின் திருமணம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரேம்ஜி பார்த்த வேலை: இந்நிலையில், சிம்பு யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சும்மா கல்யாணம் பண்ணு உன் வயசுல இருக்குறவங்க எல்லாம் கல்யாணம் பண்ணிட்டாங்களேன்னு சொல்றாங்க, பதிலுக்கு நானும் உங்க வயசுல இருக்கவங்களாம் போய் சேர்ந்துட்டாங்களே நீங்க எப்போ போக போறீங்கன்னு கேட்டா நல்லாவா இருக்கும் என பேசிய வீடியோவை நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார். அதை பார்த்த பிரேம்ஜி பண்ண வேலை தான் தற்போது ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தி உள்ளது.

சிம்புவை கோர்த்து விட்டு: அந்த வீடியோவை பார்த்து பிரேம்ஜிக்கு சிரிப்பு தாங்கல உடனே ஸ்மைலிக்களை போட்டு சிம்புவையும் டேக் செய்திருக்கிறார் பிரேம்ஜி. இருவருமே இன்னும் திருமணமாகாதவர்கள் என்பதால், இப்படியெல்லாம் பேசினால், எப்பவுமே கல்யாணம் ஆகாது என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











