ஹீரோவாக களம் இறங்கும் முரட்டு சிங்கிள் பிரேம்ஜி

சென்னை : சுரேஷ் சங்கையா இயக்க உள்ள படத்தில் ஹீரோவாக பிரேம்ஜி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இசையில் கவனம் செலுத்தி வரும் பிரேம்ஜி, 'பார்ட்டி' படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

பிரேம்ஜி என்றால் நம் நினைவிற்கு வருவது மங்காத்தா தான். இவர் பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் என்பது அனைவருக்கும் தெரியும். இவர், சரோஜா, கோவா, பிரியாணி, மாஸ் என்ற படங்களில் காமெடியில் கலக்கி இருப்பார். எப்போதும் ஜாலியாக இருக்கும் இவர் இன்னும் முரட்டு சிங்குளாகவே உள்ளார்.

Premji is going to be the hero

இசையின் மீது ஆர்வம் கொண்ட பிரேம்ஜி பல படங்களில் பாடியிருக்கிறார். சென்னை 28ல 'வாழ்க்கையை யோசிங்க' பாடல், 'சரோஜா சாமானிக்காலோ' போன்ற பாடல்கள் எல்லாம் செம ஹிட் ஆனாது. மேலும், யுவன் சங்கர் ராஜாவின் கீழ் பின்னணி இசையில் பணியாற்றியும் இருக்கிறார்.

இசையை தாண்டி அதிகபடியாக நடிப்பில் கவனம் செலுத்தி வந்த பிரேம்ஜி, வெங்கட்பிரபு படத்தில் கண்டிப்பாக எதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடித்து விடுவார். மேலும் இவர் அண்ணன் படத்தில் தான் அதிகம் நடித்தும் இருக்கிறார். பிரேம்ஜி இல்லாமல் வெங்கட் பிரபு இயக்கும் முதல் படமும் பார்ட்டி தான் .

Premji is going to be the hero

தற்போது பிரேம்ஜி சுரேஷ் சங்கையா இயக்கப் போகும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தில் ஹீரோவாக பிரேம்ஜி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது. இதுவரை ஹீரோவாக நடிக்காத பிரேம்ஜி இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். சுரேஷ் சங்கையா 'ஒரு கிடாயின் கருணை மனு' என்ற படத்தை இயக்கிய இயக்குனர் ஆவார். இப்படம் மக்களிடையே நல் மதிப்பை பெற்றது.

பிரேம்ஜி கடைசியாக சிம்பா படத்தில் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். தற்போது இசையில் கவனம் செலுத்தி வரும் பிரேம்ஜி, தன் அண்ணன் படமான பார்ட்டி படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

More from Filmibeat

Read more about: premji பிரேம்ஜி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X