»   »  சூர்யாவை விடாமல் துரத்தும் "பிரேம் குமார்"!

சூர்யாவை விடாமல் துரத்தும் "பிரேம் குமார்"!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிலருக்கு சில விஷயங்களை மறக்க முடியாது.. அப்படித்தான் சூர்யாவுக்கும்.. கடைசி வரை "பிரேம் குமார்" என்ற பெயரை மறக்கவே முடியாது. அந்த அளவுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுத்து விட்டார் பிரேம்குமார்.

ஆனால், இந்த பிரேம் குமார் மட்டுமல்ல, இன்னொரு பிரேம் குமாரையும் சூர்யாவால் மறக்க முடியாது. அது என்னவோ, என்ன மாயமோ தெரியலை.. பிரேம்குமார் என்ற பெயர் விடாமல் சூர்யாவைத் துரத்தி வருவதாகவே தெரிகிறது.

Premkumar haunts Surya

சில வருடங்களுக்கு முன்பு வெளியான படம் பேரழகன். சூர்யா இரட்டை வேடத்தில் கலக்கியிருந்த படம். அவருக்கு சிறந்த நடிகர் என்ற பெயரை ரசிகர்களிடம் வாங்கித் தந்த படம் பேரழகன். அதில் கூண் முதுகுடன் சின்னா என்ற கேரக்டரில் நடித்திருப்பார் சூர்யா.

ஒரு நாள், அந்தக் கேரக்டர், "புரோக்கர்" விவேக்குடன் பெண் பார்க்கச் செல்லும். பெண் வீட்டுக்குப் போனதும் மாப்பிள்ளை உங்க பேர் என்ன என்று "கமிஷன் மண்டி" கஜேந்திரன் கேட்க பிரேம் குமார் என்று வெட்கச் சிரிப்புடன் கூறுவார் "சின்னா" சூர்யா.

Premkumar haunts Surya

அன்று அந்த பிரேம் குமார், சூர்யாவை சிரிக்க வைத்தார். ஆனால் இன்று இன்னொரு பிரேம் குமார் வந்து டென்ஷனாக்கி விட்டு விட்டார்.

இப்ப சொல்லுங்க.. சூர்யாவால் மறக்க முடியுமா "பிரேம் குமாரை"!!

English summary
Surya cannot forget the name Premkumar forever in his life, why you know?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil