நடிகர் ப்ருத்விராஜுக்கு பெண் குழந்தை!
பிரபல தமிழ் - மலையாள நடிகர் ப்ருத்விராஜ் மனைவி சுப்ரியாவுக்கு நேற்று பெண் குழந்தை பிறந்தது.
ப்ருத்விராஜ் - சுப்ரியா கடந்த 2011-ல் காதலித்து திருமணம் செய்தனர். இந்த நிலையில் சுப்ரியா கர்ப்பமானார். இதனை ப்ருத்விராஜ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை 3.33 மணிக்கு கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சுப்ரியாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. சுக பிரசவம் மூலம் குழந்தை பிறந்துள்ளதாகவும், தாயும், குழந்தையும் நலமாக இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
தனக்கு குழந்தை பிறந்ததை நடிகர் ப்ருத்விராஜ், மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்.
Comments


Click it and Unblock the Notifications