7 நாள் குவாரன்டைன் ஓவர், அடுத்து வீடு..இதோட முடிஞ்சுதுன்னு நினைச்சிடாதீங்க! பிரபல ஹீரோ எச்சரிக்கை!

By

சென்னை: வீட்டுத்தனிமையுடன் உங்கள் குவாரன்டைன் முடிந்துவிடாது என்று பிரபல ஹீரோ தெரிவித்துள்ளார்.

பிரபல மலையாள ஹீரோ பிருதிவிராஜ். இவர் ஆடுஜீவிதம் என்ற படத்தில் நடித்து வருகிறார். பிளஸ்சி இயக்குகிறார்.

இதில் நடிகைகள் அமலா பால், அபர்ணா பாலமுரளி, வினீத் ஶ்ரீனிவாசன், லக்‌ஷ்மி சர்மா உட்பட பலர் நடிக்கின்றனர்.

பாலைவனம்

பாலைவனம்

ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கும் இந்தப் படத்தின் கதை வெளிநாட்டில் பாலைவனத்தில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இதன் படப்பிடிப்பை ஜோர்டானில் நடத்த முடிவு செய்தனர். அதன்படி இயக்குனர் பிளஸ்சி, ஹீரோ பிருத்விராஜ் உட்பட சுமார் 58 பேரைக் கொண்ட இந்தப் படக்குழு கடந்த மார்ச் மாதம் ஜோர்டான் சென்றது.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

அங்குள்ள வாடி ரம் என்ற பாலைவனப் பகுதியில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போதுதான், கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்தது. ஏப்ரல் 10-ம் தேதி வரை படப்பிடிப்பை நடத்திக் கொள்ள, அந்நாடு அனுமதி அளித்திருந்தது. பின்னர் அங்கு கொரோனாவுக்கான கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டதால், படப்பிடிப்பு திடீரென்று நிறுத்தப்பட்டது.

மீண்டும் ஷூட்டிங்

மீண்டும் ஷூட்டிங்

இதனால் படக்குழு இந்தியா திரும்ப முடிவு செய்தது. ஆனால், சர்வதேச விமான போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டு விட்டதால் அங்கேயே தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதுபற்றி நடிகர் பிருத்விராஜ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார். பின்னர், இந்தப் படக்குழு ஷூட்டிங்கை அங்கு மீண்டும் ஆரம்பித்து படப்பிடிப்பை முடித்தது.

சிறப்பு விமானம்

சிறப்பு விமானம்

இந்நிலையில் ஜோர்டானில் இருந்து சிறப்பு விமானம் மூலம் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியா திரும்பினார். கொச்சி விமான நிலையம் வந்த அவர்கள் அனைவரும் 14 நாள் தனிமைப்படுத்தப்பட்டனர். நடிகர் பிருத்விராஜ் கொச்சியில் உள்ள ஓல்ட் ஹார்பர் நட்சத்திர ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். நேற்றுடன் 7 நாள் ஓட்டல் தனிமைப்படுத்துதல் முடிந்துவிட்டது.

ஓட்டல் ஊழியர்கள்

ஓட்டல் ஊழியர்கள்

இதையடுத்து வீட்டில் 7 நாள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதுபற்றி குறிப்பிட்டுள்ள அவர், நன்கு பயிற்சிபெற்ற ஓட்டல் ஊழியர்கள் மற்றும் அவர்களின் உபசரிப்புக்கு நன்றி. வீட்டுத் தனிமைப்படுத்தலுக்குச் செல்லும் அல்லது அங்கு ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

Recommended Video

Prithviraj is Back to Home | Supriya Menon • Aadujeevitham, Boney Kapoor
விதிமுறைகள்

விதிமுறைகள்

வீட்டுக்குச் செல்வதோடு உங்கள் குவாரன்டைன் காலம் முடிவடைந்துவிடாது. அதனால் அது தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் கண்டிப்பாகக் கடைபிடியுங்கள். வீட்டில் வயதானவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருந்தால் அங்கு செல்வதை தவிருங்கள், அல்லது கவனமாக இருங்கள் என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X