உடம்புக்கு கட்டுப்பாடு இருக்கு.. மனசுக்கு இல்ல.. ஒரே மாதத்தில் உருமாறிய பிருத்விராஜ்!

திருவனந்தபுரம்: ஆடுஜீவிதம் படத்திற்காக 30 கிலோ வரை எடை குறைத்த நடிகர் பிருத்விராஜ் ஒரே மாதத்தில், பழையபடி ஃபிட்டாக மாறியுள்ளார்.

Recommended Video

Prithviraj is Back to Home | Supriya Menon • Aadujeevitham, Boney Kapoor

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் பிருத்விராஜ் ஜோர்டானில் இருந்து சில நாட்களுக்கு முன்னர் தான் நாடு திரும்பினார்.

தற்போது அரசு அறிவுறுத்தலின் படி 14 நாட்கள் வீட்டில் தனிமைப்பட்டுக் கிடக்கிறார்.

30 கிலோ எடை குறைப்பு

30 கிலோ எடை குறைப்பு

கடந்த மாதம் ஆடு ஜீவிதம் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளுக்காக 30 கிலோ வரை எடை குறைத்து சட்டை அணியாமல் மெலிந்த தேகத்துடன் நடித்துக் கொடுத்துள்ளார் நடிகர் பிருத்விராஜ். பின்னர் லாக்டவுன் காரணமாக ஜோர்டானில் சிக்கித் தவித்து வந்த பிருத்விராஜ் மற்றும் ஆடுஜீவிதம் படக்குழுவினர் சமீபத்தில் அரசு உதவியுடன் நாடு திரும்பினர்.

வீட்டிலேயே ஜிம்

வீட்டிலேயே ஜிம்

வெளிநாட்டில் இருந்து வீடு திரும்பிய பிருத்விராஜ் 14 நாட்கள் ஹோம் குவாரண்டைனில் இருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறார். இதன் காரணமாக வீட்டிலேயே ஜிம் செட்டப்பை உருவாக்கி கடினமாக உடற்பயிற்சி செய்து வருகிறார். கடந்த மாதம் 30 கிலோ வரை எடை குறைத்து நடித்த பிருத்விராஜா இது என வியக்க வைக்கும் அளவுக்கு தற்போது செல்ஃபி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மனசுக்கு கட்டுப்பாடு இல்லை

மனசுக்கு கட்டுப்பாடு இல்லை

இயக்குநராகவும், நடிகராகவும் கலக்கி வரும் பிருத்விராஜ் தற்போது சட்டை இல்லாமல், தனது கட்டுமஸ்த்தான உடலை காட்டியபடி செல்ஃபி புகைப்படம் எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி உள்ளார். கூடவே ஆடுஜீவிதம் படத்திற்காக உடல் எடையை குறைத்ததையும் தற்போது பழையபடி உருமாறி இருப்பதையும் பதிவிட்டு "The human body has it's limits..the human mind doesn't!" உடலுக்கு கட்டுப்பாடு உண்டு, மனசுக்கு இல்லை என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

அய்யப்பனும் கோஷியும்

அய்யப்பனும் கோஷியும்

பிருத்விராஜ் நடிப்பில் உருவாகி வரும் பல படங்கள் பல்வேறு மொழிகளில் ரீமேக் ஆகி வருகின்றன. இந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியான அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தை ரீமேக் செய்ய தமிழ் மற்றும் இந்தி திரையுலகம் போட்டிப் போட்டு வருகிறது. இந்தியில் அய்யப்பனும் கோஷியும் உரிமையை ஜான் ஆபிரகாம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

திரைப்படமாகும் நாவல்

திரைப்படமாகும் நாவல்

இயக்குநர் பிலெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகி வரும் ஆடுஜீவிதம் படத்தில் அமலா பால், அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். பென்யமின் எழுதிய ஆடுஜீவிதம் நாவல் தான் அதே பெயரில் திரைப்படம் ஆகி வருகிறது. இந்த படத்திற்கு மாளவிகா மோகனனின் தந்தை கே.யூ. மோகனன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில், ரசூல் பூக்குட்டியின் இசைக் கோர்ப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X