கவினின் புதிய படம்.. ஹீரோயின் யார் தெரியுமா?.. வெளியான செம அப்டேட்

சென்னை: கவின் தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகராக இருக்கிறார். அவரது நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. கவினின் நடிப்பும் பிரமாதமாக இருந்தது. இதனையடுத்து அவர் நடித்த ஸ்டார், ப்ளடி பெக்கர் ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்தன. இந்நிலையில் அவரது புதிய படத்தின் பூஜை இன்று நடந்தது. அதுதொடர்பான புகைப்படங்கள் ட்ரெண்டாகியிருக்கின்றன்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் மற்றும் நாடகங்கள் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தவர் கவின். சிவகார்த்திகேயன் போல் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கவினுக்கு சினிமாவில் எந்த திருப்புமுனையும் ஏற்படாமல் இருந்தது. இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொண்டார். அங்கிருந்து வெளியே வந்த பிறகு லிஃப்ட் என்ற படத்தில் நடித்தார். விமர்சன ரீதியாக படம் ரசிக்கப்பட்டாலும் கவினுக்கு சொல்லிக்கொள்ளும்படி எந்த பெயரும் கிடைக்கவில்லை.

டாடா திருப்புமுனை: இந்தச் சூழலில் கணேஷ் கே பாபு இயக்கத்தில் டாடா என்ற படத்தில் நடித்தார் கவின். அவருக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து பிரபலமான அபர்ணா தாஸ் நடித்திருந்தார் . ஒரு கல்லூரி மாணவன் குழந்தைக்கு தந்தையாகும் உருவாகும் சூழலை ஒன்லைனாக வைத்துக்கொண்டு படம் உருவாகியிருந்தது. இப்படம் அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக கவினின் நடிப்பு வெகுவாக ரசிக்கப்பட்டது.

ஸ்டார்: டாடா படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு இளன் இயக்கத்தில் ஸ்டார் படத்தில் நடித்தார் கவின். கவினுடன் லால், அதிதி போகாங்கர் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். கடந்த மே மாதம் ஸ்டார் திரைப்படம் வெளியானது. பியார் பிரேமா காதல் படத்தின் மூலம் இளன் ஏற்கனவே கவனம் ஈர்த்திருந்ததால் இப்படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படத்துக்கு கலவையான விமர்சனமே கிடைத்தது.

Priyanka Mohan has been signed as the heroine in Kavin s new film
Photo Credit:

பிளெடி பெக்கர்: ஸ்டார் படத்தின் தோல்வியை கண்டிப்பாக கவின் எதிர்பார்த்திருக்கமாட்டார்தான். எனவே அடுத்த படத்தில் எப்படியாவது பெரும் வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இருந்தார். எனவே ப்ளடி பெக்கர் படத்தில் நடித்தார். அதில் கெட்டப்புகளை எல்லாம் மாற்றி மெர்சல் செய்திருந்தாலும் படம் பெரிய் வெற்றியை பெறவில்லை. வரிசையாக இரண்டு படங்கள் சந்தித்த தோல்வி அவருக்கு கொஞ்சம் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.

கவினின் புதிய படம்: இந்நிலையில் கவின் வரிசையாக படங்களில் கமிட்டாகிவருகிறார். அந்தவகையில் தண்டட்டி படத்தின் இயக்குநர் இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். சமீபத்தில்தான் அதற்கான பூஜை நடைபெற்றது. சூழல் இபடி இருக்க அவரது ஒன்பதாவது படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க்விருக்கிறார். படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ட்ரெண்டாகியிருக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X