ஹீரோவுக்காக மோதிக்கொள்ளும் சிவகார்த்திகேயன் விஜய் தேவரகொண்டா

Recommended Video

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ படம்- வீடியோ

சென்னை: ஹீரோ யாருக்கு என்பது சிவகார்த்திக்கேயனுக்கும் விஜய் தேவரகொண்டாவிற்கும் இடையே சிக்கல் ஏற்பட்டுள்ளது. பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திக்கேயன். இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.ஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில் ஹீரோ படத் தலைப்பு தன்னுடையது தான் என்று வழக்கு தொடுத்துள்ளார் நடிகர் விஜய் தேவரகொண்டாவை வைத்து ஹீரோ என்ற பெயரில் இயக்கும் ஆனந்த் அண்ணாமலை.

உலகத்திலேயே அதிகபட்சமாக 247 எழுத்துக்களை கொண்ட பழமையான மொழி தமிழ் தான். ஆனால் அதில் இருந்து ஒரு அழகான உருப்படியான படத்தலைப்பை உருவாக்க முடியாமல், இன்றைய இயக்குநர்களும் சரி தயாரிப்பாளர்களும் திணறி வருகிறார்கள். இது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

Problem for Sivakarthikeyan’s Hero Movie

நடிகர் சிவகார்த்திகேயன், நம்ம வீட்டு பிள்ளை படத்திற்கு பிறகு தற்சமயம் இரும்புத் திரை படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில், கல்யாணி பிரியதர்ஷன், அர்ஜுன், இவானா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கே.ஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் தொடங்கிய நிலையில், கடந்த செப்டம்பர் மாதத்தில் ஹீரோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. அதோடு வரும் டிசம்பரில் இப்படத்தை வெளியிடவும் படக்குழு திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் ஹீரோ படத்தின் தலைப்புக்கு சிக்கல் எழுந்துள்ளது.

ஹீரோ படத் தலைப்பு தன்னுடையது தான் என்று வழக்கு தொடுத்துள்ளார் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் அடுத்த பட இயக்குநர் ஆனந்த் அண்ணாமலை. ஹீரோ தலைப்பை ட்ரைபல் ஆர்ட்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனம் மூலம் 2017ஆம் ஆண்டில், தான் ரிஜிஸ்டர் செய்து விட்டதாகவும் அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டிருந்தார் இயக்குநர் ஆனந்த் அண்ணாமலை.

Problem for Sivakarthikeyan’s Hero Movie

அதே போல் தயாரிப்பாளர் கேஜேஆர் கோட்டபாடி ராஜேஸ் தரப்பிலும் ஆதரங்கள் வெளியிடபட்டிருக்கிறது. இருவருமே தலைப்பை தமிழ் தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்து உள்ளனர். இது முழுக்க முழுக்க தயாரிப்பாளர் சங்கத்தின் தவறு என்று இப்பொழுது தெரியவந்துள்ளது.

இந்த நேரத்தில் ஆனந்த் அண்ணாமலையும் சரி, பி.எஸ்.மித்ரனும் சரி இத்தலைப்பை விட்டுப் கொடுப்பதாய் தெரியவில்லை. இரு படத்தயாரிப்பு நிறுவனங்களுக்கு இடையே பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. முடிவு என்னவாக இருக்கும் என காத்திருந்து பார்ப்போம்.

ஆனால், தலைப்பு என்னவாக இருந்தால் என்ன, படத்தில் கதை என்று ஒன்று இருக்கவேண்டுமே. அது தானே முக்கியம் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X