சிவகார்த்திகேயனை அடித்தாரா தனுஷ்?..அவருக்கு எதிராக இத்தனை பேர் இருக்காங்களாம்..பிரபலம் கொடுத்த ஷாக்
சென்னை: சிவகார்த்திகேயன் கடைசியாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார். பெரும் எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர் இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்துவருகிறார். இதுதவிர்த்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அவருக்கும் தனுஷுக்கும் கடந்த சில வருடங்களாகவே மோதல் போக்கு நிலவிவருகிறது என்று தகவல்கள் பரவிக்கொண்டிருக்கின்றன.
சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் நடந்த ரியாலிட்டி ஷோ ஒன்றில் போட்டியாளராக கலந்துகொண்டு வெற்ற் பெற்றார். அதற்கு அதே சேனலில் தொகுப்பாளராக வாய்ப்பு கிடைத்தது. அதனை பயன்படுத்திக்கொண்ட அவர் தனது தரமான கவுண்ட்டர்களாலும், கலகலப்பான பேச்சாலும் தமிழ்நாடு ரசிகர்களிடையே இடம் பிடித்தார். தொடர்ந்து அவரை துணை கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து தனுஷ் சினிமாவுக்குள் அழைத்து வர; ஹீரோவாக பாண்டிராஜ் மெரினா படத்தில் அறிமுகம் செய்தார். ஹீரோவாக நடித்த முதல் படம் ஓரளவுக்குத்தான் வரவேற்பு பெற்றது. அதேசமயம் எஸ்கேவின் எதார்த்தமான நடிப்பை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இவர் ஒரு ரவுண்டு வருவார் என்று அப்போதே ஆரூடம் கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வரிசையான ஹிட்டுகள்: மெரினாவை தொடர்ந்து கிடைத்தன. அதன்படி அவர் நடித்த மனம் கொத்தி பறவை உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற; அவரது திரையுலக வாழ்க்கையை ரஜினிமுருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய படங்கள் ஒட்டுமொத்தமாக புரட்டி போட்டன. இரண்டு படங்களுமே அவருக்கு கமர்ஷியல் ரீதியாக மெகா ப்ளாக் பஸ்டர் படங்களாக மாறின. இதன் காரணமாக அனைவராலும் கவனிக்கப்பட்ட நடிகராக மாறினார் அவர். அதுமட்டுமின்றி சில படங்களிலேயே காணாமல் போய்விடுவார் என்று சொன்ன ஒரு தரப்புக்கு தனது உழைப்பாலும், வெற்றியாலும் தரமான பதிலடியையும் கொடுத்தார்.

தொடர்ந்து 100 கோடி ரூபாய் க்ளப்: சூழல் இப்படி இருக்க நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் படத்தில் நடித்தார் அவர். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. மேலும் நூறு கோடி ரூபாயை வசூலித்து கெத்து காண்பித்தது. அதனையடுத்து அவர் நடித்த டான் படமும் நூறு கோடி ரூபாய் அள்ளியது. தொடர்ந்து இரண்டு படங்கள் நூறு கோடி ரூபாய் க்ளப்பில் சேர்ந்துவிட்டதால் தமிழின் டாப் 10 நடிகர்களில் ஒருவராக இடம்பிடித்தார். அதற்கு பிறகு நடித்த மாவீரன், அயலான் ஆகிய திரைப்படங்களும் சூப்பர் ஹிட்டுகள். அதிலும் தனுஷின் கேப்டன் மில்லர் படத்துக்கு போட்டியாக களமிறங்கிய அயலான் அந்தப் பந்தயத்தில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ஹிட்டடித்தது. சினிமாவில் அறிமுகப்படுத்தியவரையே எஸ்கே வீழ்த்திவிட்டாரே என்று கமெண்ட்ஸ்கள் எல்லாம் பறந்தன.
அமரன்: இப்படி அசுர வேகத்தில் வளர்ந்த சிவகார்த்திகேயனுக்கு அமரன் படம் அடுத்தக்கட்ட பாய்ச்சலை கொடுத்திருக்கிறது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படம் செம ரெஸ்பான்ஸை பெற; வசூலில் 300 கோடி ரூபாய் க்ளப்பில் சேர்ந்துவிட்டது. இதனால் சிவகார்த்திகேயன் அடுத்த விஜய் என்றெல்லாம் அவரது ரசிகர்கள் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்து முடித்துவிட்டு இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படம் ஜன நாயகன் படத்துக்கு போட்டியாக களமிறங்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் ஒரு தகவல் ஓடுகிறது. இதுதவிர்த்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க எஸ்கே கமிட்டாகியிருக்கிறார்.
தனுஷுடன் மோதல்?: இதற்கிடையே சிவகார்த்திகேயனுக்கும் தனுஷுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக மோதல் போக்கு நிலவிவருவதாக கூறப்படுகிறது. ஆனால் அதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. மேலும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திருமணத்தில் எஸ்கேவும், தனுஷும் நடனம் ஆடியிருந்தார்கள். அதனைப் பார்த்த பலரும் இப்படி இணைந்து ஜாலியாக டான்ஸ் ஆடும் இவர்களுக்குள்ளா பிரச்னை என்று கேள்வி எழுப்பினார்கள். அதேசமயம் இதெல்லாம் பொது நாகரீகத்துக்காக அவர்கள் செய்தது. உண்மையில் இரண்டு பேருக்கும் பிரச்னைதான். தனுஷை தாக்கித்தான் கொட்டுக்காளி ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசினார் என்று இன்னமும் ஒருதரப்பினர் சொல்வதுண்டு.

தயாரிப்பாளர் பேட்டி: இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர், "சிவகார்த்திகேயனை தனுஷ்தான் வளர்த்துவிட்டார். பாண்டிராஜ் சிவாவை மெரினா படத்தில் அறிமுகப்படுத்தியிருந்தாலும்; எதிர்நீச்சல் படம்தான் சிவாவுக்கு ஒரு ஹீரோவாக பெரிய அடையாளத்தை கொடுத்தது. ஏனெனில் வுண்டர்பார் நிறுவனம், அனிருத் இசை, தனுஷ் கேட்டுக்கொண்டதற்காக நயன்தாரா ஒரு பாடலில் வந்து நடனமாடியது என எந்த வளரும் ஹீரோவுக்கும் நடக்காத விஷயம் எல்லாம் சிவகார்த்திகேயனுக்கு எதிர்நீச்சல் படத்தில் நடந்தது. ஆனால் அவருக்கும் தனுஷுக்கும் மோதல் என்று பலரும் சொல்லிவருகிறார்கள். அதில் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
இத்தனை எதிரிகள்: அதேபோல் சிவகார்த்திகேயனுடன் மட்டுமின்றி நயன்தாரா, அனிருத் ஆகிய இரண்டு பேருடனும் தனுஷுக்கு மோதல் எழுந்துவிட்டது. அனிருத்தை வளர்த்துவிட்டவரும் தனுஷ்தான் என்பது குறிப்பிடத்தக்கது. நயனும், தனுஷும் க்ளோஸாகத்தான் இருந்தார்கள். இப்போது தனுஷுக்கு எதிராக இருக்கும் நயன்தாராவும், அனிருத்தும் சிவகார்த்திகேயனோடு நல்ல நட்பில் இருந்தார்கள். சினிமாவில் இப்படி நடப்பதெல்லாம் ரொம்ப ரொம்ப சாதாரண விஷயம். அதேபோல் எதிர்நீச்சல் பட சமயத்தில் தனுஷ், சிவகார்த்திகேயன்,அந்தப் படத்தின் இயக்குநர் ஆகியோர் ஒரு ரூமில் இருந்தபோது, வுண்டர் பார் நிறுவனத்துக்கு தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று தனுஷ் கூறியதாகவும்; அதற்கு சிவகார்த்திகேயன் மறுத்ததாகவும் அதனால் சிவகார்த்திகேயனை தனுஷ் அடித்துவிட்டதாகவும் ஒரு தகவல் ரொம்ப வருடங்களாக உண்டு.
அதெல்லாம் இல்லை: ஆனால் அதில் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. அப்படி நடந்திருக்க வாய்ப்புகள் இருக்கின்றனவா என்பதும் எனக்கும் தெரியவில்லை. இது ஒருபக்கம் இருக்க சந்தானம் கடனாளி ஆனதற்கு சிவகார்த்திகேயனே காரணம். ஏனெனில் அவரைப் பார்த்துதான் சந்தானத்துக்கு ஹீரோவாகும் ஆசை வந்தது. ஆனால் அவரால் நினைத்த வெற்றியை பெற முடியவில்லை. தான் நடித்த படங்களுக்காக பொருளாதார ரீதியாகவும் சில விஷயங்கள் செய்தார். அது அவருக்கு பெரிய கடனை கொண்டு வந்து நிறுத்தியது. சிவகார்த்திகேயனுக்கு டாப் ஹீரோயின்கள் ஜோடி சேர்ந்தார்கள். சந்தானத்துக்கு அப்படி இல்லை. மும்பையிலிருந்து அழைத்து வந்துதான் நடிக்க வைத்தார்கள்" என்றார்.


Click it and Unblock the Notifications











