ஷங்கரிடம் ரஜினி சிக்கினால் என்ன ஆகும்?.. அவர் செம தெளிவு.. பிரபலம் இப்படி ஓபனாக பேசுறாரே
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக கேம் சேஞ்சர், இந்தியன் 2 ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின. இரண்டு படங்களுமே படுதோல்வியை சந்தித்தது அவருக்கு பெரிய அவப்பெயரை பெற்றுக்கொடுத்துவிட்டது. சூழல் இப்படி இருக்க சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலை படமாக்கவிருக்கிறார் ஷங்கர். இந்நிலையில் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு ஒரு பேட்டியில் பல விஷயங்களை பேசியிருக்கிறார்.
ஷங்கரின் இயக்கத்தில் நடிக்க வேண்டுமென்று ஒருகாலத்தில் ஆசைப்படாத நடிகர்களே இல்லை. அவரின் இயக்கத்தில் நடித்துவிட்டால் கண்டிப்பாக வசூலிலும், விமர்சனத்திலும் அப்ளாஸை அள்ளிவிடலாம் என்ற நிலைமை இருந்தது. அதன் காரணமாகத்தான் ரஜினி, கமல், விஜய் என பல முன்னணி ஹீரோக்கள் அவருடன் பயணப்பட்டார்கள். அவர்களை வைத்து ஷங்கர் இயக்கிய படங்களும் சூப்பர் ஹிட், மெகா ஹிட்டாகின.
இப்போதைய நிலைமை: ஆனால் கடந்த சில வருடங்களாகவே ஷங்கர் கால் வைக்கும் இடமெல்லாம் கன்னி வெடியாக இருக்கின்றன. ரஜினியை வைத்து இயக்கிய 2.0 திரைப்படம் முழுக்க முழுக்க கிராஃபிக்ஸில் சொதப்பி கார்ட்டூன் படம் போல் ஆக்கிவிட்டார். அடுத்ததாக கமலை வைத்து இயக்கிய இந்தியன் 2 திரைப்படம் அவரது கரியரிலேயே மிகப்பெரிய ட்ரோலை சந்தித்த படமாக அமைந்துவிட்டது.
கேம் சேஞ்சரும் மாற்றவில்லை: சரி நம் கதையை எடுத்தால்தான் இந்தக் காலத்து ரசிகர்களுக்கு செட் ஆகவில்லை; இளம் மற்றும் சென்சேஷனல் இயக்குநரான கார்த்திக் சுப்புராஜ் எழுதிய கதையை படமாக எடுக்கலாம் என முடிவு செய்து; ராம்சரண், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி உள்ளிட்டோரை வைத்து தெலுங்கில் கேம் சேஞ்சர் படத்தை இயக்கினார். இதனை தயாரிப்பாளர் தில்ராஜு பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அந்தப் படமும் படுதோல்வியைத்தான் சந்தித்தது.

தில்ராஜுவும் வருத்தம்: மேலும் தயாரிப்பாளர் தில்ராஜுவுக்கு கடுமையான நஷ்டத்தை அந்தப் படம் கொடுத்துவிட்டது. அதுமட்டுமின்றி ஷங்கரை வைத்து படம் தயாரித்தது தன்னுடைய தவறு என்று அவர் சொல்லும் அளவுக்கு நிலைமை சென்றது. ஏற்கனவே வாரிசு திரைப்படம் தில்லின் காலை வாரிவிட்டது. அதிலிருந்தே எழ முடியாமல் திணறிக்கொண்டிருந்தவருக்கு; கேம் சேஞ்சர் திரைப்படம் மேற்கொண்டு இடியைத்தான் இறக்கியது.
வேள்பாரி ஷங்கர்: நிலைமை இப்படி இருக்க மதுரை எம்.பியும் எழுத்தாளருமான சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவல் ரசிகர்களிடையே ஏகோபித்த ஆதரவை பெற்றது. அந்த நாவலை திரைப்படமாக்கும் உரிமையை ஷங்கர் முறைப்படி வாங்கியிருக்கிறார். ஆனால் ஷங்கர் இந்த நாவலை படமாக எடுப்பது அவ்வளவு பொருத்தமாக இருக்காது என்பது ரசிகர்களில் பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது.
பாலாஜி பிரபு பேட்டி: இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கொடுத்த ஒரு பேட்டியில், "வேள்பாரி நாவலை படமாக எடுத்தால் மொத்தம் மூன்று பாகங்களாக எடுக்க வேண்டும். அதற்கு கண்டிப்பாக ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட் ஆகும். ஆனால் இப்போதைக்கு ஷங்கர் இருக்கும் நிலைமைக்கு யாரும் அவரை நம்பி 1000 கோடி ரூபாய் எல்லாம் போட மாட்டார்கள். லைகா நிறுவனம் எல்லாம் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம். ஆனால் அந்நிறுவனமே இந்தியன் 2 படத்தால் மண்ணை கவ்விக்கொண்டுதன் போனது.
ரஜினி தெளிவு: வேள்பாரி நாவல் ஒரு லட்சம் பிரதிகள் விற்றதை கொண்டாடும் நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. அதில் ரஜினியும் கலந்துகொண்டார். எப்படியாவது அவரது மைண்ட் செட்டை மாற்றி வேள்பாரி படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க வேண்டுமென் ஷங்கர் நினைக்கிறார். ஆனால் ரஜினி தெளிவான ஆள். இப்போது ஷங்கருக்கு மார்க்கெட் இல்லை என்பதை உணர்ந்ததால்தான் அவருடன் படம் செய்யாமல்; இளம் இயக்குநர்களுடன் பணியாற்றுகிறார். அவர் ஷங்கரிடம் இனி சிக்கமாட்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications











