டி.ராஜேந்தர் அதற்கு ஒத்துக்கொள்வாரா?.. லோகேஷ் கனகராஜிடம் கேட்ட ரஜினி.. இப்படியும் நடந்திருக்கா?
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்திருக்கிறார் ரஜினிகாந்த். அடுத்த மாதம் படமானது ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் மீது ஏற்கனவே அதிக எதிர்பார்ப்பு இருக்கும் சூழலில் படத்தின் முதல் சிங்கிள் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்தப் பாடலை டி.ராஜேந்தர் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் நல்ல ரெஸ்பான்ஸையே பெற்றது.
கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி மெகா ஹிட் கொடுத்த கையோடு ரஜினிகாந்த்துடன் லோகேஷ் கனகராஜ் இணைவார் என்று பேசப்பட்டது. ரஜினியும் லோகேஷை நேரில் அழைத்து அந்தப் படத்தை பற்றி பாராட்டியிருந்தார். சூழல் இப்படி இருக்க இரண்டு பேரும் இணையாமல் இருந்தார்கள். ஒருவழியாக கூலி படத்தில் அவர்கள் இணைந்திருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.
அத்தனை நடிகர்கள்: இந்தப் படத்தில் ரஜினியுடன் நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சௌபின் சாஹிர், அமீர் கான், ஸ்ருதிஹாசன், அபிராமி என பலர் நடிக்கிறார்கள். இதில் சத்யராஜ் மட்டும்தான் ரஜினிகாந்த்துடன் ஏற்கனவே நடித்திருக்கிறார். மற்றவர்கள் எல்லாம் முதன்முறையாக அவருடன் நடிக்கிறார்கள். எனவே அவர்களுடனான கெமிஸ்ட்ரி ரஜினிக்கு எப்படி இருக்கும் என்பது குறித்தும்; சத்யராஜ் நடிப்பில் எந்தவிதமான பெர்பார்மன்ஸை கொடுக்கப்போகிறார் என்பது குறித்தும் ஆவல் அதிகரித்திருக்கிறது.

படத்தின் கதை இதுவா?: இது ஒரு பக்கம் இருக்க கூலி படத்தின் கதை என்னவாக இருக்கும் என்ற மில்லியன் டாலர் கேள்வியும் ரஜினி ஃபேன்ஸிடம் எழுந்திருக்கிறது. வழக்கம்போல் ஸ்மக்லிங், வன்முறை போன்ற கதைக்களத்தைத்தான் இதிலும் அவர் எடுத்திருப்பாரோ என்றே பெரும்பாலானோரின் எண்ணமாக இருக்கிறது. அதேசமயம் இந்தக் கதையை நான் சில வருடங்களுக்கு முன்னரே எழுதிவிட்டேன்; இது ரஜினிக்காக மட்டும் எழுதப்பட்ட கதையில்லை என்றும் லோகேஷ் விளக்கியிருக்கிறார்.
முதல் சிங்கிள்: படமானது அடுத்த மாதம் ரிலீஸாகவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க படத்தின் முதல் சிங்கிளான சிகிட்டு பாடல் வீடியோ வெளியானது. அந்தப் பாடலை டி.ராஜேந்தர் பாடியிருந்தார். மேலும் அந்த வீடியோவில் அவர் நடனமும் ஆடியிருந்தது குறிப்பிடத்தக்கது. வழக்கமான அனிருத் பாடலாக இது அமைந்திருந்தாலும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்நிலையில் தயாரிப்பளர் பாலாஜி பிரபு பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.
பாலாஜி பிரபு பேட்டி: தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "கூலி படத்தில் டி.ராஜேந்தரை பயன்படுத்தினால் என்ன என்ற எண்ணம் முதலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்குத்தான் வந்தது. உடனடியாக ரஜினியிடம் இதுபற்றி அவர் கூறினார். அதற்கு ரஜினியோ, 'டி.ராஜேந்தருக்கு சமீபகாலமாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறதே அவர் எப்படி நடனம் ஆடுவார் என கேட்டார்.
ரஜினிக்காக சம்மதித்தார்: இந்த விஷயம் ராஜேந்தருக்கும் தெரியவந்தது. உடனடியாக அவரோ ரஜினிக்காக நான் எதையும் செய்வேன் என்று சொல்லி சம்மதித்தார். ஒருமுறை கட்சி ஒன்றிலிருந்து ரஜினிக்கு எதிர்ப்பு பலமாக கிளம்பியது. அப்போது ரஜினிக்கு ராஜேந்தர் தனது முழு ஆதரவை கொடுத்தார். இப்படியொரு நட்பு அவர்களுக்கிடையே இருக்கிறது" என்றார்.


Click it and Unblock the Notifications











