விரைவில் தல 61 ... டபுள் மாஸா இருக்கும்...அடித்து சொன்ன போனி கபூர்

சென்னை : ஹச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடித்து, போனி கபூர் தயாரித்துள்ள படம் வலிமை. நீண்ட காலமாக அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் இந்த படம், 2022 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வலிமை ஃபஸ்ட் க்லிம்ப்ஸ் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதிரடி ஆக்ஷன் காட்சிகள், பைக் ரேஸ் என வெளியான இந்த க்லிம்ப்ஸ் மிரட்டலாக வெளியானது.

சமீபத்தில் ரஷ்யாவில் வலிமை படத்தின் இறுதிக்கட்ட ஷுட்டிங் முடிவடைந்ததையடுத்து, போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் முடிக்கப்பட்ட பிறகு, படத்தின் டீசர், டிரைலர் போன்றவை முக்கிய நாட்களில் வெளியிடப்பட உள்ளதாக படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.

 பொங்கல் ரிலீஸ்

பொங்கல் ரிலீஸ்

இரண்டு ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்டு வரும் படம் என்பதால் வேலைகளை சீக்கிரம் முடித்து, வலிமை படத்தை தீபாவளிக்கே ரிலீஸ் செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சென்சார் சான்று உள்ளிட்ட போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளுக்கு போதிய கால அவகாசம் இல்லாததால், பட ரிலீசில் அவசரம் காட்ட வேண்டாம் என்பதால் 2022 ம் ஆண்டு பொங்கல் ரிலீசுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தல 61 கன்ஃபார்ம்

தல 61 கன்ஃபார்ம்

அஜித்தின் 60 வது படமான வலிமை படத்தின் ரிலீஸ் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டதால் அஜித்தின் அடுத்த படமான தல 61 பற்றிய தகவலை அந்த படத்தின் தயாரிப்பாளரே உறுதிப்படுத்தி உள்ளார். நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக தல 61 படத்தில் அஜித், ஹச்.வினோத், போனி கபூர் கூட்டணி இணைய உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. இது உண்மை தான் என்பதை தயாரிப்பாளர் போனி கபூர் தற்போது உறுதிப்படுத்தி உள்ளார்.

அஜித் ரசிகர்களின் அன்பு

அஜித் ரசிகர்களின் அன்பு

போனி கபூர் தனது லேட்டஸ்ட் பேட்டியில், தனது அடுத்த பிரம்மாண்ட படம் தல 61 தான் என கூறி உள்ளார். மேலும் அவர் கூறுகையில், பாலிவுட்டின் டாப் தயாரிப்பாளராக இன்று வளர்ந்துள்ள எனது திரையுலக அனுபவத்தில் தல அஜித் மீது அவரது ரசிகர்கள் வைத்திருக்கும் பாசத்தை போல் நாட்டிலேயே வேறு எந்த நடிகருக்கும் இருப்பதை நான் பார்த்ததில்லை என்றார். வலிமை படத்திற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாக அஜித் ரசிகர்கள் விடாமல் அப்டேட் கேட்டு, படத்தை உலக பாப்புலர் ஆக்கி விட்டதை போனி கபூர் ஆச்சரியத்துடன் தெரிவித்தார்.

Recommended Video

தளபதி Vijay படத்துல Work பண்ணனும்னு ஆசை | Costume designer Vasuki Bhaskar part-02 | Filmibeat Tamil
வலிமையை விட டபுள் மாஸ்

வலிமையை விட டபுள் மாஸ்

இந்த ஆண்டு இறுதியில் தல 61 படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதாகவும், இதுவும் ஆக்ஷன் பொழுதுபோக்கு படம் தான் என்றும் ஏற்கனவே கூறப்பட்டது. ஆனால் தல 61 படம் வலிமையை விட இரண்டு மடங்கு அதிக மாஸாக இருக்குமாம். தல 61 படத்திற்கான ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் ஏற்கனவே துவங்கப்பட்டு விட்டதாம். தல 61 படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு முக்கியமான பண்டிகை நாளில் வெளியிடப்பட உள்ளதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X