அஜித்த எதுவும் தடை பண்ண முடியாது... போனி கபூர் பாராட்டு

மும்பை : போனி கபூர் தயாரிப்பில் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார் தல அஜித்.

இந்தப் படம் பொங்கல் ரிலீசாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அஜித்தை பாராட்டி போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

தல அஜித்

தல அஜித்

நடிகர் அஜித்குமார் தல என அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். தொடர்ந்து சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் படங்களில் சமீப காலங்களில் அஜித்தை பார்க்க முடிகிறது. முன்னதாக போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் இவர் நடித்திருந்த நேர்கொண்ட பார்வை படம் சிறப்பான வரவேற்பை பெற்றது.

வலிமை படம்

வலிமை படம்

இந்நிலையில் தற்போது மீண்டும் இந்தக் கூட்டணியில் அஜித் நடித்துள்ள வலிமை படம் பொங்கல் ரிலீசாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி வைரலானது.

வாகா எல்லையில் அஜித்

வாகா எல்லையில் அஜித்

இந்நிலையில் நடிகர் அஜித் தற்போது வாகா எல்லையில் இருக்கும்படியான புகைப்படங்கள் வெளியாகி கடந்த சில தினங்களாக வைரலாகி வருகிறது. அவர் ராணுவ வீரர்களுடன் புகைப்படம் எடுத்த படங்களும் வெளியாகின. தற்போது காட்மாண்டு செல்லும் வழியில் அவர் உள்ளதாக கூறப்படுகிறது.

பைக் பயணம்

பைக் பயணம்

அவர் சாலை வழியாக இந்தப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். எப்போதுமே பைக் பயணத்தை அவர் விரும்புவார். அவரது படங்களிலும் இதன் தாக்கத்தை உணர முடியும். இந்நிலையில் தற்போது வலிமை படத்தை அடுத்து அவர் பைக்கில் இந்த இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

போனி கபூர் ட்வீட்

போனி கபூர் ட்வீட்

தாஜ்மகாலில் அஜித்தின் புகைப்படமும் வெளியாகி வைரலான நிலையில் தற்போது அஜித்தின் சில புகைப்படங்களை வலிமை தயாரிப்பாளர் போனிகபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அஜித் தனது கனவுகளை நோக்கிய பயணத்தை தொடர்வதை எதுவும் தடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வைரலான புகைப்படங்கள்

வைரலான புகைப்படங்கள்

தான் அவர் அதிகமாக நேசிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். போனி கபூர் வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது. அஜித்தின் ரசிகர்களை இந்தப் புகைப்படங்கள் வெகுவாக கவர்ந்துள்ள நிலையில் அவர்கள் இதை தொடர்ந்து ஷேர் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X