அஜித் அதற்காகவெல்லாம் மெனக்கெடமாட்டார்.. விருப்பம் என்ன தெரியுமா?.. ஓபனாக பேசிய தயாரிப்பாளர்

சென்னை: அஜித்குமார் நடிப்பில் அடுத்ததாக விடாமுயற்சி திரைப்படம் வெளியாகவிருக்கிறது. மேலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படமும் வெளியாகவிருக்கிறத். அந்தப் படத்துக்காக உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாகவும், அழகாகவும் மாறியிருக்கிறார் அவர். அதுதொடர்பான புகைப்படங்கள் சமீபத்தில் ட்ரெண்டாகின. இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு ரசிகர்களுக்கு அஜித்குமார் தனது வேண்டுகோள் ஒன்றையும் வைத்திருந்தார். இந்தச் சூழலில் அவர் குறித்து தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேசியிருக்கிறார்.

அஜித்குமார் ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் பணியாற்றினார். அப்படி அவர் பணியாற்றி பல வருடங்கள் ஆகிவிட்டன. அந்தவகையில் விடாமுயற்சி படத்தின் பணிகளை முடித்த அவர்; இப்போது குட் பேட் அக்லி படத்தின் பணிகளில் பிஸியாக இருக்கிறார். அந்தப் படத்துக்காக உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாக இருக்கிறார். அந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பழைய அஜித் வந்துவிட்டார் என்று உற்சாகத்தில் மிதந்துகொண்டிருக்கின்றனர். மேலும் ஆதிக்கையும் கொண்டாடிவருகிறார்கள்.

ajithkumar vidaamuyarchi good bad ugly

அஜித்தின் கோரிக்கை: இதற்கிடையே அஜித்தை கடவுளோடு ஒப்பிட்டு அவரது ரசிகர்கள் அடிக்கடி பொதுவெளிகளில் கோஷங்களை எழுப்பினார்கள். அது பெரும் அசௌகரியத்தை அவருக்கு ஏற்படுத்தியதாக தெரிகிறது. இதனையடுத்து சில நாட்களுக்கு முன்பு அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர், இனி தன்னை கடவுளோடு ஒப்பிட்டு எந்தக் கோஷத்தையும் எழுப்பாதீர்கள். குடும்பத்தை நல்லபடியாக கவனித்துக்கொள்ளுங்கள் என்று ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்தார். அது பெரும் வரவேற்பை பெற்றது.

தனஞ்ஜெயன் பேட்டி: இந்நிலையில் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "அஜித் ரசிகர்களுக்கு கொடுத்திருக்கும் அறிவிப்பை ரொம்பவே வரவேற்கிறேன். அவரது ரசிகர்கள் ஆர்வத்தில் சில விஷயங்களை செய்துவிடுகின்றனர். ஆனால் அது அவருக்கு எவ்வளவு சங்கடத்தை கொடுக்கும் என்பதை நினைக்கவே இல்லை. இந்த செயல்கள் குறித்து அஜித்திமேகூட நேரடியாக புகார்கள் சென்றிருக்கலாம்.

அந்த நபர் இல்லை: அஜித்தை பொறுத்தவரை புகழை எதிர்பார்க்கக்கூடிய நபர் இல்லை. அவர் தன்னுடைய ரசிகர்களுக்கு எப்போதும் சொல்லக்கூடியது உனது குடும்பத்தையும், தொழிலையும் கவனமாக பார்த்துக்கொள்; எனது படத்தை பிடித்தால் மட்டும் பார் என்பதைத்தான். அதுதான் அவரது விருப்பமும். தன்னையே தனது ரசிகர்கள் சுற்றி வர வேண்டும் என நினைத்து மெனகெடுபவரும் இல்லை. எதுவும் எனக்காக செய்ய வேண்டாம், சொல்ல வேண்டாம் என்று அவர் சொல்ல சொல்ல அவருக்கு ரசிகர் கூட்டம் அதிகமாகிக்கொண்டிருக்கிறது.

கோஷம் வேண்டாம்: என்னை பற்றிய கோஷங்கள் எதுவும் வேண்டாம் என்று அவர் வெளியிட்ட அறிக்கைக்கு பிறகு இன்னும் பத்து லட்சம் பேர் அவரது ரசிகர்களாக மாறுவார்கள். கமலும்கூட தன்னை யாரும் ஆண்டவர் என்றோ, உலக நாயகன் என்றோ அழைக்க வேண்டாம்; என்னை கமல் ஹாசன் என்று அழைத்தால் போதும் என்று கூறியிருக்கிறார். ஏனெனில் இத்தனை நாட்கள் இப்படிப்பட்ட விஷயங்களை அவர் கவனித்திருக்கமாட்டார்கள். பிஸியாக படங்களில் நடித்து வந்தார்கள். இப்போது அவர்களுக்கு மெசேஜ்களை பார்த்த பிறகு இதுபற்றிய புரிதல் ஏற்படும்.

அன்பின் வெளிப்பாடுதான்: நாளுக்கு நாள் தனக்கு ரசிகர்கள் அதிகரித்துக்கொண்டே செல்கிறார்கள் என்பது அஜித்துக்கு தெரியும். அதனால் இவர் அதற்காக மெனக்கெட்டு வேலை செய்ய வேண்டியது இல்லை. ரசிகர்கள் தன் மீது வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடு அதிகமாக இருப்பதை கட்டுப்படுத்த வேண்டுமென்றால் அவர் இது மாதிரியான அறிக்கைகள் வெளியிடுவது அவசியம்தான்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X