சூரி என்ன பெரிய அழகா?.. அதெல்லாம் கிடையாது.. தயாரிப்பாளர் இப்படி பேசிருக்காரே?

சென்னை: சூரியின் நடிப்பில் கடைசியாக வெளியான மாமன் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. அடுத்ததாக அவரது நடிப்பில் ஏழு கடல் ஏழு மலை, மண்டாடி ஆகிய படங்கள் ரிலீஸாகவிருக்கின்றன. இந்த இரண்டு படங்களின் மீதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. இது ஒருபக்கம் இருக்க ஹீரோவாக சூரி இதுவரை நடித்து பாசிட்டிவ் ரெஸ்பான்ஸையே பெற்றுவருகிறார். இந்நிலையில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

சுசீந்திரனால் அடையாளப்பட்டவர் சூரி. அதற்கு முன்னதாகவே பல படங்களில் சிறிய வேடங்களில் தலை காட்டி கொண்டிருந்தவருக்கு வெண்ணிலா கபடி குழு திரைப்படம் பெரிய வெளிச்சத்தை கொடுத்தது. அந்த வெளிச்சத்தை பயன்படுத்திக்கொண்டு சரசரவென்று முன்னேறினார் அவர். ரஜினி, விஜய், அஜித் என பலரின் படங்களில் காமெடி ரோலை ஏற்று தனக்கான தனியிடத்தை பிடித்தார்.

ஹீரோவான சூரி: இப்படிப்பட்ட நிலைமையில்தான் தலைசிறந்த இயக்குநராக பார்க்கப்படும் வெற்றிமாறனின் இயக்கத்தில் விடுதலை படத்தில் கதையின் நாயகனாக மாறினார். படம் சூப்பர் டூப்பர் ஹிட். சூரிக்கும் ஹீரோவாக கதவை திறந்து வைத்தது. அந்தப் படத்துக்கு பிறகு அவர் நடித்த கொட்டுக்காளி சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது.மேலும் கருடன் திரைப்படம் கமர்ஷியலாகவும் பெரிய சக்சஸ் ஆனது.

Producer K Rajan Open Talks about Soori Here are Full Details
Photo Credit:

மாமன்: தொடர்ந்து அவர் நடித்த விடுதலை 2, மாமன் ஆகிய திரைப்படங்கள் பெரிய வரவேற்பை எதுவும் பெறவில்லை. அதிலும் மாமன் படத்தின் கதையை ரசிகர்கள் கழுவி கழுவி ஊற்றிவிட்டார்கள். அந்தப் படத்தின் கதையை சூரிதான் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கதையில் பிற்போக்குத்தனமும், கிரிஞ்ச் தனமும் அளவுக்கு அதிகமாகவே இருந்தது என்று ஓபனாகவே அடிக்க ஆரம்பித்தார்கள். இதனால் சூரி தரப்பு கொஞ்சம் அப்செட்தான்.

அடுத்த படங்கள்: அதேசமயம் ஒருபக்கம் கதைக்கு முக்கியத்துவம் படங்கள், மறுபக்கம் கமர்ஷியல் படங்கள் என தனது பாதையில் தெளிவாகவும், நிதானமாகவும் போய்க்கொண்டிருக்கிறார் அவர். அடுத்ததாக அவரது நடிப்பில் ஏழு கடல் ஏழு மலை, மண்டாடி ஆகிய படங்கள் வரவிருக்கின்றன. இரண்டு படங்களுமே அவருக்கு பெரிய பெயரை பெற்றுத்தரும் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் சூரி குறித்து தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியிருப்பது ட்ரெண்டாகியிருக்கிறது.

ராஜனின் பேச்சு: கயிலன் படத்தின் விழாவில் பேசிய ராஜன், "இப்போது வரும் இயக்குநர்களின் சிந்தனை நன்றாக இருக்கிறது. அதேசமயம் அதிக செலவை தயாரிப்பாளர்களுக்கு வைத்துவிடுகிறார்கள். சூரி என்ன பெரிய அழகா? காமெடி ரோல் செய்துகொண்டிருந்தார்.இப்போது ஹீரோவாக வரிசையாக நான்கு முதல் ஐந்து படங்கள்வரை சக்சஸ் கொடுத்துவிட்டார். அவரது படங்களில் கிளாமர், வல்கர் போன்ற எந்த சமாசாரமும் இல்லை. அதனால்தான் அவரது படங்களை குடும்பத்தினர் ரசிக்கிறார்கள். படமும் ஓடுகிறது" என்றார்.

More from Filmibeat

Read more about: soori சூரி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X