என்னை வைத்து படம் எடுங்கள் என கெஞ்சினார் அஜித்.. தயாரிப்பாளர் அதிரடி

சென்னை: மாணிக்கம் நாராயணன் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க தயாரிப்பாளர்களில் ஒருவராக வலம் வந்தவர். முன் தினம் பார்த்தேனே, வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட பல படங்களை அவர் தயாரித்திருக்கிறார். இப்போது தயாரிப்பிலிருந்து ஒதுங்கியிருக்கும் அவர் யூட்யூப் சேனல்களுக்கு பேட்டி அளித்துவருகிறார். அந்தப் பேட்டிகளில் அஜித்தை கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியில் அஜித் குறித்து விமர்சனம் செய்திருக்கிறார்.

கோலிவுட்டின் டாப் நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அடுத்ததாக லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்க கமிட்டானார். படத்தின் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் அஜர்பைஜானில் தொடங்கி நடந்தது. பிறகு தமிழ்நாடு திரும்பிய விடாமுயற்சி டீம் படத்தின் ஷூட்டிங்கை அப்படியே விட்டுவிட்டது. இதனால் விடாமுயற்சியின் நிலைமை என்னவானது என்று தெரியவில்லை.

Ajith Manickam Narayanan Vidaamuyarchi

குட் பேட் அக்லி: இதற்கிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் அஜித். படத்தின் ஷூட்டிங்கும் ஹைதராபாத்தில் தொடங்கியதாக கூறப்பட்ட சூழலில்; சில நாட்களுக்கு முன்பு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில் மூன்று அஜித்கள் இருந்தார்கள். எனவே இந்தப் படத்தில் அவர் ட்ரிப்பிள் ஆக்‌ஷனா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்தச் சூழலில் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் அஜித் குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "விஜய்க்கு இருக்கும் மார்க்கெட் அஜித்துக்கு கிடையாது. அஜித்துக்கு ஓபனிங்க் இருப்பது நிச்சயம்தான். ஆனால் விஜய்க்கு கிடைக்கும் நீண்ட தூர வசூல் அஜித்துக்கு கிடைக்காது. அவர் அண்மையில் நடித்த படங்களில் மிகப்பெரிய ஹிட்டாகி அதிக நாட்கள் ஓடியது என்றால் விஸ்வாசம்தான். அதில் நயன் தாராவின் நடிப்பும் முக்கிய பங்கு வகித்திருந்தது. அதேபோல் எமோஷனும் மக்களிடம் கனெக்ட் ஆகிவிட்டது. அஜித்துக்கு இப்படி எப்போதாவதுதான் அமையும்.

துப்பாக்கி: அவரது படங்களில் துப்பாக்கியை மட்டும் வைத்து சுட வேண்டியதுதான். சில சமயங்களில் திரைக்கு வெளியே அவரது துப்பாக்கிகள் விழுந்துவிடுகின்றன. அஜித்தை யாரும் அவர்களாகவே அழைத்து படம் எடுக்கமாட்டார்கள். இவராகத்தான் சென்று படத்தை கமிட் செய்வார். அஜித்தை விரும்பி செல்பவர்கள் குறைவு. ஏனெனில் அவர் முன்னமே தனக்கான பணத்தை வாங்கிக்கொள்வார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தில் இவர் விவேகம் படத்தில் நடித்திருந்தார். அது தோல்வியடைந்ததால் விஸ்வாசம் படத்தை அந்த கம்பெனிக்கு நடித்துக்கொடுத்தார்.

யார் தயாரிப்பாளர்கள்: அஜித்தை வைத்து போனி கபூர், சத்யஜோதி பிலிமிஸ் தவிர வேறு யார் தயாரிப்பார்கள். சாய் பாபா கோயிலுக்கு சென்று ரத்னத்தை சந்தித்து என்னை வைத்து படம் எடுங்கள் என கெஞ்சினார் அஜித். இவ்வளவு பெரிய ஸ்டார் அஜித் வந்து கேட்கிறாரே என்று நினைத்துதான் சத்யஜோதி பிலிம்ஸ் ஒத்துக்கொண்டது. நடிகரின் கிளாமருக்கு தயாரிப்பாளரும் மயங்கிவிடுகிறார்.

மயக்கம் தீராது: அவர்களாகத்தான் தெரிந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் அந்த மயக்கம் எப்போதும் தீராது. ரத்னத்துடன் பிரச்னை வந்தவுடன் போனிகபூரிடம் சென்றார் அஜித். 10 தயார்ப்பாளர்களை கூட அஜித்தால் பிடிக்க முடியாது. சக்கரவர்த்தியுடன் அவர் நீண்ட நாட்கள் பயணித்தார். அவருடன் பிரச்னை வந்தவுடன் வேறு தயாரிப்பாளரை மாற்றிவிட்டார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X