அஜித் டார்ச்சர் செய்தே பழகிட்டார்.. சரியான புத்திசாலி.. ஏகேவை வைத்து செய்த தயாரிப்பாளர்
சென்னை: மாணிக்கம் நாராயணன் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க தயாரிப்பாளர்களில் ஒருவராக வலம் வந்தவர். முன் தினம் பார்த்தேனே, வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட பல படங்களை அவர் தயாரித்திருக்கிறார். இப்போது தயாரிப்பிலிருந்து ஒதுங்கியிருக்கும் அவர் யூட்யூப் சேனல்களுக்கு பேட்டி அளித்துவருகிறார். அந்தப் பேட்டிகளில் அஜித்தை கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியில் விடாமுயற்சி குறித்தும், அஜித் குறித்தும் விமர்சனம் செய்திருக்கிறார்.
கோலிவுட்டின் டாப் நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அடுத்ததாக லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடிக்க கமிட்டானார். படத்தின் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் அஜர்பைஜானில் தொடங்கி நடந்தது. பிறகு தமிழ்நாடு திரும்பிய விடாமுயற்சி டீம் படத்தின் ஷூட்டிங்கை அப்படியே விட்டுவிட்டது. இதனால் விடாமுயற்சியின் நிலைமை என்னவானது என்று தெரியவில்லை.

குட் பேட் அக்லி: இதற்கிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் அஜித். படத்தின் ஷூட்டிங்கும் ஹைதராபாத்தில் தொடங்கியதாக கூறப்பட்ட சூழலில்; சில நாட்களுக்கு முன்பு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில் மூன்று அஜித்கள் இருந்தார்கள். எனவே இந்தப் படத்தில் அவர் ட்ரிப்பிள் ஆக்ஷனா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்தச் சூழலில் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் அஜித் குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.
மாணிக்கம் பேட்டி: தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "அஜித்தும், மகிழ் திருமேனியும் இணைந்திருக்கும் படத்துக்கு விடாமுயற்சி என்று அழகான பெயர் வைத்திருக்கிறார்கள். அதனால் படத்தையும் பெரும் முயற்சிக்கு பிறகுதான் முடிப்பார்கள். அந்தப் படத்தின் இயக்குநர் மகிழுக்கு இதயமே கிடையாது. அவரால் தயாரிப்பாளர்தான் உடைந்து சாவார். அஜித்துக்கு இதயம் இருக்கா இல்லையா என்பது பற்றி எனக்கு தெரியாது.
ரோட்டுக்கு வந்திருக்கிறார்கள்: சினிமாவில் எத்தனை தயாரிப்பாளர்கள் ரோட்டுக்கு வந்திருக்கிறார்கள். பழைய பெரும் நடிகர்கள் பலரும் தயாரிப்பாளர்களாக மாறி இருக்கிறார்கள். அவர்கள் கஷ்டப்பட்டவர்கள். கமல் இப்போது தன்னுடைய படம் ஓடுவதால் நிமிர்ந்து நிற்கிறார். அவர் சினிமாவின் மீது அதீத ஆர்வம் கொண்டவர். அதனால் அவர் சோதனை முயற்சிகளை செய்து பிரச்னைக்குள்ளேயே இருப்பார். அவர் இப்போதுதான் உண்மையிலேயே நிமிர்ந்து நிற்கிறார்.
டார்ச்சர் செய்து பழகிட்டார்: அஜித் எப்போதுமே தயாரிப்பாளராக மாறமாட்டார். அவர் மிகப்பெரிய புத்திசாலி. அவர் மற்றவர்களை டார்ச்சர் செய்தே பழகிவிட்டார். அஜித் எப்போதுமே தயாரிப்பாளரிடமிருந்து பணத்தை முன்னதாகவே வாங்கிக்கொள்வார். சூர்யாகூட படத்தை தயாரித்தார். அதனால் சில நஷ்டங்களை சந்தித்தார். என்னை கேட்டால் அவர் எல்லாம் ஜாலியாக நடித்துவிட்டு பணத்தை வாங்கிக்கொண்டு ஜாலியாக எஞ்சாய் செய்ய வேண்டும்” என்றார்.
முன்னதாக மாணிக்கம் நாராயணன் கடந்த வருடம் அளித்திருந்த ஒரு பேட்டியில், 'நான் தயாரிப்பாளராக பீக்கில் இருந்தபோது எனக்கு ஒரு படம் நடித்து தருகிறேன் என்று சொல்லி அஜித் அட்வான்ஸ் வாங்கினார். ஆனால் படமும் நடித்துக்கொடுக்கவில்லை; பணத்தையும் கொடுக்கவில்லை. அஜித் ஒரு நன்றி கெட்டவர்' என்று காட்டத்துடன் சொல்லியிருந்தது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











