ஸ்ரீயை தேடி அலையும் தயாரிப்பாளர்.. கேள்விப்படும் தகவல் அதிர்ச்சியா இருக்கு.. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க
சென்னை: வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் அறிமுகமான ஸ்ரீ குறித்த தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கின்றன. அவரது இன்ஸ்டாகிராம் வீடிேயாக்களை வைத்து தேடி வரும் அவரது நெருங்கிய நண்பர்கள் மன வேதனை அடைந்துள்ளனர். மற்றொரு திரையுலக நண்பர்களும் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில், சூர்யா, கார்த்திக் படங்களை எடுத்து வெற்றி பெற்ற பிரபல தயாரிப்பாளர் ஸ்ரீக்கு உதவ முன்வந்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்து பின்பு இயக்குநர் பாலாஜி சக்திவேல் படத்தில் நடித்து பிரபலம் அடைந்தவர் ஸ்ரீ. மாநகரம் படங்கள் இவருக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்தன. அதைத்தொடர்ந்து வில் அம்பு, இறுகப்பற்று படங்களில் நடித்திருந்தார். இறுகப்பற்று படத்தில் இவரது நடிப்பு திறமையை அனைவரும் பாராட்டினர். இறுகப்பற்று படத்திற்கு பிறகு உயர்ந்த நிலையை அடைவார் என்று எதிர்பார்த்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஸ்ரீ எலும்பும் தோலுமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அவர் மீது அன்பு காட்ட தொடங்கினர்.

ரசிகர்கள் வேதனை: மாநகரம் படத்தில் இருப்பதற்கும் தற்போது இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோவை பார்த்த ரசிகர்கள் வேதனை அடைந்தனர். ஸ்ரீ ப்ரோ உங்களுக்கு என்ன ஆச்சு சொல்லுங்க. நீங் இப்படி இருப்பீங்க கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை. நல்லபடியா மாறி மீண்டும் படத்தில் நடிப்பதை பார்க்க காத்திட்டு இருக்கோம். சீக்கிரம் நலம் பெற வேண்டும் எனக் கூறி ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் உறவினர்கள் வேதனையடைந்துள்ளனர். மேலும், அவர் குறித்த தவறான தகவலும் பரவி வருவதாக புகார் எழுந்திருக்கிறது. அவருக்கு போன் செய்தாலும் எடுக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.
மனநிலை பாதிப்பா?: நடிகர் ஸ்ரீ போடும் வீடியோக்களும், அவர் இருக்கும் நிலையும் மிகவும் மோசமாக இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால், அவர் அப்படி இருக்க வாய்ப்பில்லை. திரையுலகில் அவருக்கு நடந்த ஏமாற்றத்தால் இப்படி ஆகிவிட்டார் என்றும் சிலர் தெரிவிக்கின்றனர். ஏதோ ஒரு வகையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதனால், ஸ்ரீயின் நடவடிக்கை மிக மோசமாக இருப்பது போல் சிலருக்கு தெரிவதாகவும் அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். உடல் மெலிந்து காணப்படுவதால் சற்று வருத்தமும் அடைந்துள்ளனர்.
ஸ்ரீயின் தோழி உருக்கம்: நடிகர் ஸ்ரீயை பற்றி நன்கு தெரிந்த தோழி ஒருவர் உருக்கமாக தெரிவித்திருக்கிறார். ஸ்ரீயை எனக்கு நன்றாக தெரியும். ஆனால், அவரை பற்றி பலரும் பலவிதமாக பேசுவது தான் வருத்தமாக இருக்கிறது. நீங்கள் நினைப்பது போன்று ஸ்ரீ அப்படிப்பட்ட பையன் இல்லை. ரொம்ப நல்லவன். அவனிடம் பேச பலமுறை முயற்சித்து வருகிறேன். இதுவரை அவன் எனது போன் காலை எடுக்க மாட்டேங்குறான். ஆனால், இப்போது அவன் மீது அன்பு காட்ட நிறைய பேர் இருப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நல்ல பெயரை எடுத்திருக்கிறான். கூடிய விரைவில் உங்களை பழைய ஸ்ரீயாக வந்து சந்திப்பான் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

ஸ்ரீயை பார்க்க விரும்பும் தயாரிப்பாளர்: இந்நிலையில், கைதி, பிரியாணி, மெட்ராஸ், கொம்பன், இறுகப்பற்று போன்ற படங்களை தயாரித்த எஸ்.ஆர்.பிரபு ஸ்ரீ குறித்த செய்தி கேட்டு உதவி செய்ய முன் வந்திருக்கிறார். நடிகர் ஸ்ரீ குறித்த செய்தி வெளியான நிலையில், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது சமூகவலைதள பக்கத்தில், நடிகர் ஸ்ரீயை தொடர்புகொள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், நாங்கள் என பல தரப்பினரும் நீண்ட காலமாக முயல்கிறோம். இதனிடையே அவரை பற்றிய யூகங்கள் வருவது துரதிர்ஷ்டமானது. ஸ்ரீயை தொடர்புகொண்டு அவரை நல்ல நிலமைக்கு கொண்டு வருவதற்கு யாரேனும் எங்களுக்கு உதவி செய்தால் மிக்க மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவை போன்று இயக்குநர் லோகேஷ் கனகராஜூவும் ஒருபக்கம் அவரை தேடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











