விக்ரமின் வீர தீர சூரன் பட சர்ச்சை.. விளக்கம் கொடுத்த தயாரிப்பாளர்!
சென்னை: விக்ரம் நடிப்பில் இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் உருவான 'வீர தீர சூரன்' பல பிரச்சனைக்கு மத்தியில் நேற்று தியேட்டரில் வெளியான. இப்படம் சம்மந்தமான ஒரு வழக்கால் ரிலீஸுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்து இணையத்தில் பரவும் பலவிதமான தகவல் குறித்து தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் தனது எக்ஸ் தளபக்கத்தில் தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா போன்ற திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் அருண்குமார் இயக்கிய படம் 'வீர தீர சூரன் 2'. இப்படத்தில் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ், துஷரா விஜயன், ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ரசிகர்கள் ஏமாற்றம்: வீர தீர சூரன் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹெச்.ஆர் பிக்சர்ஸுக்கு நிதியுதவி வழங்கிய பி4யு நிறுவனத்திற்கு ஓடிடி உரிமம் விற்கப்படாமலேயே படத்தை வெளியிடுவதாக அந்நிறுவனம் (பி4யு) டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனால் திட்டமிட்டப்படி நேற்று காலை திரையரங்குகளில் படம் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். பின் இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பிறகு செட்டில்மெண்ட் முடிவிற்கு வந்ததைத் தொடர்ந்து, விக்ரமின் வீர தீர சூரன் படத்தை வெளியிட டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. நீதிமன்ற உத்தரவு வெளியான நிலையில், அனைத்து திரையரங்குகளிலும் மாலையில் தான் படம் வெளியானது.
ஷிபு தமீன்ஸ்: இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வீர தீர சூரன் படம் வெளியாக தாமதத்திற்கு படக்குழு, விநியோகஸ்தர்கள், ரசிகர்கள் மற்றும் ஒட்டுமொத்த பார்வையாளர்களுக்கும், நடிகர் விக்ரம், இயக்குநர் அருண்குமாரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த படம் குறித்து இணையத்தில் பரவி வரும் சர்ச்சையை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இது தயாரிப்பாளர்களின் நிதிப்பிரச்சனையால் ஏற்பட பிரச்சனைவில்லை. OTT உரிமையாளரால் திரையரங்கு வெளியீட்டிற்கு முன் தங்கள் உரிமைகளை விற்க முடியவில்லை. தங்கள் முதலீட்டைப் பாதுகாக்க, VDS கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின் தியேட்டரில் வெளியனது அதற்கு கதிரேசன், அருள்பதி அனைவருக்கும் என்று என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











