Ajith - பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா.. அஜித்தை மிரட்டிய தயாரிப்பாளர் இவர்தானா?.. பரபரப்பு தகவல்

சென்னை: Ajith (அஜித்) திரையுலகம் சார்பில் கடந்த 2010ஆம் ஆண்டு கருணாநிதிக்கு நடந்த பாசத்தலைவனுக்கு பாராட்டு விழாவுக்கு வர சொல்லி அஜித் மிரட்டப்பட்டது குறித்து புதிய தகவல் வெளியாகிறது.

அஜித்குமார் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பியது. முக்கியமாக போட்டிக்கு களமிறங்கிய விஜய்யின் வாரிசு படத்தையும் துணிவு பின்னடைவை சந்திக்க வைத்தது. இதனால் அஜித் மீண்டும் ஃபார்முக்கு வந்துவிட்டதாக ஏகேவின் ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பினர். அஜித்தும் ஹேப்பி அண்ணாச்சிதான் என கோலிவுட்டில் பேசப்பட்டது.

Producer Sivasakthi Pandiyan Threatened Ajith For Paasathalaivanuku Paarathu Vizha

விடாமுயற்சி: துணிவு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது அஜித்குமார் தனது 62ஆவது படத்தில் கமிட்டானார். லைகா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி இயக்கும் அந்தப் படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். த்ரிஷா, சஞ்சய் தத், ப்ரியா பவானி சங்கர், ஆரவ் உள்ளிட்டோர் படத்தில் நடிக்க கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது.

அஜர்பைஜானில் ஷூட்டிங்: படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டதோடு மற்ற எந்த அறிவிப்பையும் படக்குழு வெளியிடவில்லை. அதேசமயம் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் தொடங்கி நடந்தது. முதல் ஷெட்யூலை முடித்த படக்குழு சென்னை திரும்பியது. அடுத்தக்கட்டமாக சென்னை, துபாயில் படப்பிடிப்பு நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்தடுத்த படங்கள்: விடாமுயற்சி படத்துக்கு பிறகு அஜித்தின் லைன் அப் குறித்த தகவலும் வெளியானது. அதன்படி ஆதிக் ரவிச்சந்திரன், வெற்றிமாறன், விஷ்ணுவர்தன் ஆகியோரின் இயக்கத்தில் அடுத்தடுத்து அவர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. அஜித்தை பொறுத்தவரை எந்த படத்தின் ப்ரோமோஷனுக்கோ, பொது நிகழ்ச்சிகளிலோ கலந்துகொள்வதில்லை என்ற பாலிசியை வைத்திருப்பவர்.

பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா: அந்த பாலிசியை ஸ்ட்ரிக்ட்டாக ஃபாலோ செய்தது எப்போதிலிருந்து என்றால் கடந்த 2010ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சராக இருந்த கருணாநிதிக்கு திரையுலகம் நடத்திய பாசத்தலைவனுக்கு பாராட்டு விழாவிலிருந்துதான். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், நிகழ்ச்சியில் கலந்துக்க சொல்லி எங்களை திரையுலகில் சிலர் மிரட்டுகிறார்கள் என்று கருணாநிதியிடம் மேடையில் இருந்தபடியே தைரியமாக முறையிட்டார். அது பெரும் பரபரப்பை அப்போது ஏற்படுத்தியது.

சிவசக்தி பாண்டியன்: இந்நிலையில் அப்போது அஜித்தை மிரட்டியது யார் என்பது குறித்த புதிய தகவல் கோடம்பாக்கத்தில் உலாவிக்கொண்டிருக்கிறது. அதாவது அந்த சமயத்தில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளராக இருந்த சிவசக்தி பாண்டியன்தான் அஜித்தை மிரட்டியதாகவும்; வரவில்லை என்றால் உங்களுக்கு தயாரிப்பாளர் சங்கத்தில் ரெட் கார்டு போடப்பட்டு சினிமாவில் நடிக்க முடியாமல்படி செய்துவிடுவோம் சொன்னதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே வரும் டிசம்பர் 24ஆம் தேதி கலைஞர் கருணாநிதிக்கு தமிழ் திரையுலகம் சார்பில் நடத்தப்படும் கலைஞர் 100 விழாவில் அஜித் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X