'இளையதளபதி' vs 'புரட்சி தளபதி'??

By Staff


கோலிவுட்டில் இளைய சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் இளைய தளபதிக்குப் போட்டியாக புதிதாக ஒரு புரட்சி தளபதி வந்துள்ளார். இந்த புதிய தளபதி வேறு யாருமல்ல, விஷால்தான்.

தமிழ் ஹீரோக்களுக்கு நடிக்க வருகிறதோ இல்லையோ, இரண்டு படங்களில் நடித்து விட்டால் போதும் ஏதாவது ஒரு பட்டம் தேடி ஓடி வந்து விடும். இல்லாவிட்டால் அவர்களே ஒரு பட்டத்தை சூட்டிக் கொண்டு அசத்தி விடுவார்கள்.

இந்தியாவிலேயே பட்டப் பெயருடன் வலம் வரும் நாயகர்கள் கூட்டம் தமிழ் சினிமாவில்தான் ஜாஸ்தி. சூப்பர் ஸ்டாரில் தொடங்கி, லிட்டில் சூப்பர் ஸ்டார் வரை ஏகப்பட்ட பட்டங்கள் தமிழ் சினிமாவில்தான் உலவிக் கொண்டிருக்கின்றன.

அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆருக்கு ஏகப்பட்ட பட்டங்களை சூட்டினார்கள். மக்கள் திலகம், புரட்சி நடிகர், புரட்சித் தலைவர் என அதன் பட்டியல் நீளம். அத்தனை பெயர்களும் புகழ் பெற்றவை. அதேபோல சிவாஜிக்கு நடிகர் திலகம் என்றார்கள். ஜெமினியை காதல் மன்னன் என்றார்கள்.

ரஜினிக்கு ஒட்டுமொத்த ஸ்டார்களிலேயே சூப்பர் ஸ்டார் என்ற பொருள் வரும் வகையில், கலைப்புலி தாணு சூப்பர் ஸ்டார் என்று பெயர் கொடுத்தார். கமல்ஹாசனுக்கு உலக நாயகன், காதல் இளவரசன், கலைஞானி என பல பட்டங்கள் கிடைத்தன.

சத்யராஜை புரட்சித் தமிழ் என்றார்கள். அஜீத்துக்கு அல்டிமேட் ஸ்டார், அது போக தல என்ற புதிய பட்டம் வேறு கிடைத்தது. சிம்புவுக்கு சின்ன வயதிலேயே லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று தந்தை டி.ஆர். பெயர் சூட்டி விட்டார்.

பிரஷாந்த்துக்கு டாப் ஸ்டார், எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஸ்வீட் ஸ்டார் என விதம் விதமான பட்டங்கள் சூட்டப்பட்டன. பரத்துக்குக் கூட சின்ன தளபதி என ஒரு பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இது போக, என்ன அர்த்தம் என்று கூடத் தெரியாமல் பல பட்டங்கள் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில், நடிகர் விஷாலுக்கு புரட்சி தளபதி என புதிய பட்டத்தை சூட்டியுள்ளனர். மலைக்கோட்டை படத்தின் டைட்டிலில் இந்தப் பட்டப் பெயர் இடம் பெறுகிறதாம். விளம்பரத்திலும் இடம் பெற்றுள்ளது இந்தப் புதுப் பட்டம்.

விஷால் இதுவரை நடித்துள்ள படங்கள் ஐந்து. இந்த நிலையில் மலைக்கோட்டை படத்தில் அவருக்கு புரட்சி தளபதி என இயக்குநர் பூபதி பாண்டியன் பட்டம் சூட்டியுள்ளாராம்.

இளையதளபதி பட்டத்துடன் வலம் வந்து கொண்டிருக்கும் விஜய்க்குப் போட்டியாக இந்தப் பட்டமா என்று விஷாலிடம் கேட்டபோது, அதை அவர் மறுத்தார். எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள இந்த பட்டம், என்னை விரும்புபவர்கள் கொடுத்துள்ள பட்டமாகும்.

எனது ரசிகர்கள்தான் இதைக் கொடுத்துள்ளனர். அதை நான் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டுள்ளேன். எனவே இதில் உள்ளர்த்தம் கற்பிக்கக் கூடாது. யாரையும் போட்டியாக நினைத்துக் கொண்டு இந்தப் பட்டத்தை நான் சூடிக் கொள்ளவில்லை.

இளையதளபதி விஜய்யை குறி வைத்து இந்தப் பட்டம் கொடுக்கப்பட்டதாக கூறுவதில் உண்மையில்லை. அது தவறு. எனக்கும், விஜய்யின் சாதனைகளுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அதை நான் அறிவேன். எனவே நான் விஜய்க்குப் போட்டியில்லை என்றார் விஷால்.

(டப்பா படங்களையும் காசு கொடுத்துப் பார்க்கும், ரசிகர்களுக்கும் ஏதாவது பட்டம் கொடுக்கலாமே - பொறுமைத் திலகம், சகிப்புத் திலகம், தியாகத் திலகம் - என!!)

ப்ரியாமணிக்கு புகழாரம்:

தனது பேட்டியின்போது மலைக்கோட்டையில் தனக்கு ஜோடியாக நடித்த ப்ரியா மணியை ரொம்பவே புகழ்ந்தார் விஷால்.

மேலும், தனக்கும் ப்ரியா மணிக்கும் இடையே ரொம்ப நாளாக நல்ல நட்பு இருந்து வருவதாகவும் கூறினார் விஷால். திமிரு படப்பிடிப்பு மதுரையில் நடந்தபோது பருத்தி வீரன் படப்பிடிப்புக்காக ப்ரியா மணியும் மதுரையில் கேம்ப் போட்டிருந்தாராம்.

அப்போது இருவரும் சந்தித்துக் ெகாள்ள நட்பு பூத்ததாம். அது முதல் இருவருமே நல்ல நண்பர்களாகி விட்டார்களாம். இந்த நட்பின் விளைவாகத்தான் மலைக்கோட்டையிலிருந்து திரிஷா விலக்கப்பட்டபோது அந்த வாய்ப்பை ப்ரியாவுக்குக் ெகாடுத்தார்களாம்.

ப்ரியா மணியுடன் நடித்தது குறித்து விஷால் கூறுகையில், ப்ரியா மணி டான்ஸில் அசத்துவார். நான் கூட பல டேக்குகள் வாங்குவேன். ஆனால் அவர் ஒரே டேக்கில் ஓ.கே. ஆகி விடுவார்.

எந்த நடிகையும் இப்படி ஒத்துழைப்பு கொடுத்ததில்லை. நன்கு ஒத்துழைத்து நடித்தார் ப்ரியா மணி என்றார் விஷால்.

அண்ணன் விக்ரம் கிருஷ்ணா, ஷ்ரேயா ரெட்டியை காதலித்து கல்யாணம் செய்து கொள்வது போல நீங்களும் என்று கேட்டபோது, எனக்கு இதுவரை யார் மீதும் காதல் வரவில்லை. அப்படியே வந்தால் அவரையேதான் கல்யாணம் செய்ேவன் என்றார் விஷால். கருத்த முகத்தையும் மீறி வெட்கப் புன்னகையைக் காண முடிந்தது.

ப்ரியா,ஃப்ரீயா? விஷால் ரெடியா??

More from Filmibeat

Read more about: illayathalapahy vishal
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X