புஷ்பா 2 படத்தை நிஜமாக்கிய விஜய்.. திரிஷா பிறந்தநாள் கிஃப்ட்னு டிரெண்டாகும் வீடியோ
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. திமுகதான் ஆட்சியமைக்கும் என பல கருத்துக்கணிப்புகள் கூறியிருந்த சூழலில்; யாரும் எதிர்பார்க்காத வகையில் தவெக வெற்றியை பெற்றிருக்கிறது. அந்தக் கட்சி மொத்தம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. பெரும்பான்மைக்கு இன்னும் பத்து எம்.எல்.ஏக்கள் தேவை. எப்படியும் விஜய் முதலமைச்சராவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதால் அவரது ரசிகர்களும், தொண்டர்களும் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026ஆம் ஆண்டுக்கான முடிவுகளை ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஆவலோடு எதிர்பார்த்திருந்தது. அதற்கு காரணம் விஜய். எத்தனை சீட்டுக்களை அவர் பிடிக்கப்போகிறார்; எத்தனை விழுக்காடு வாக்குகளை பெறப்போகிறார் என்றெல்லாம் எல்லோரும் கணக்கு போட்டுக்கொண்டிருக்க; நேற்று காலையில் தேர்தல் முடிவுகள் வெளியாக தொடங்கி சில மணி நேரங்களிலேயே அவர்களது அத்தனை பேர் கணக்கையும் அடித்து நொறுக்கியது தவெக.

எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்: தவெகவின் சீட்டுக்கள் 20ஐ தாண்டுமா என்றுதான் எல்லோரும் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் அந்தக் கட்சியோ நேற்று காலை 10 மணிக்கெல்லாம் ஆளுங்கட்சி திமுகவையும், எதிர்க்கட்சி அதிமுகவையும் பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்தது. பிற்பகலுக்கு மேல் எல்லாம் தவெக கட்சி 100 தொகுதிகளின் வெற்றியை நெருங்கிவிட்டது. மொத்தம் அந்தக் கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. பெரும்பான்மையை பெறவில்லை என்றாலும் கட்சி ஆரம்பித்த சில வருடங்களிலேயே இப்படி ஒரு மிரட்டலை அவர் கொடுப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
அடுத்து என்ன?: பெரும்பான்மை இன்னும் கிடைக்காவிட்டாலும்; அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளில் கண்டிப்பாக தவெகவுக்கு தேவையான இன்னும் 10 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கிடைத்துவிடும் என்றே தெரிகிறது. இதன் காரணமாக விஜய் கண்டிப்பாக முதலமைச்சராகிவிடுவார். இரண்டு தொகுதிகளில் ஒரு தொகுதியில் விஜய் வென்றாலே ஆச்சரியம் என்று பேசிய நிலைமையில்; அவரோ தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவிருக்கிறார். இதனால் அவரது ரசிகர்களும், தொண்டர்களும் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார்.
வீட்டிலும் ஹேப்பி: விஜய்யின் இந்த வெற்றியால் அவரது குடும்பமும் மகிழ்ச்சியில் இருக்கிறது. தேர்தல் முடிவுகள் தவெகவுக்கு சாதகமாக போக தொடங்கியதிலிருந்தே எஸ்.ஏ.சி வீட்டில் கொண்டாட்டம்தான். அதேபோல் நடிகை திரிஷாவும் நேற்று விஜய் வீட்டுக்கு வந்து நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துவிட்டு சென்றார். அதுமட்டுமின்றி திரைத்துறையிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்திருக்கின்றன. இந்நிலையில் இன்னொரு வீடியோவை சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாக்கியுள்ளனர் ரசிகர்கள்.
என்ன வீடியோ?: அதாவது புஷ்பா 2 படத்தில் கதாநாயகன் அல்லு அர்ஜுன் கதாநாயகி ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாள் அன்று ஒருவரை முதலமைச்சர் ஆக்குவார். அது தன் மனைவிக்கான கிஃப்ட் என்றும்; அவரது ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத்தான் பிறந்தநாள் அன்று முதலமைச்சர் ஆக்கினேன் என சொல்வார். இதை வைத்து ரசிகர்கள், விஜய் புஷ்பா 2 படத்தின் சீனை ரீ க்ரியேட் செய்திருக்கிறார். மே நான்காம் தேதி திரிஷாவுக்கு பிறந்தநாள். அதனால்தான் அவரது பிறந்தநாள் கிஃப்ட்டாக இந்த தமிழ்நாட்டையே வாக்குகள் மூலம் வாங்கி வந்திருக்கிறார். விஜய் உண்மையில் மாஸ்தான் என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications