பட்டையை கிளப்பும் புஷ்பா 2 டீசர்.. 24 மணி நேரத்தில் எத்தனை மில்லியன் வியூஸ் தெரியுமா?
சென்னை: அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் புஷ்பா 2. மிகப்பெரிய எதிர்பார்ப்பை அந்தப் படம் ஏற்படுத்தியிருக்கிறது. புஷ்பா 1 போலவே புஷ்பா படத்தின் இரண்டாம் பாகமும் ஹிட்டடிக்கும் என்று அல்லுவின் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். படமானது ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இந்தச் சூழலில் இன்று அல்லு அர்ஜுன் தனது பிறந்தநாளை கொண்டாடுவதை முன்னிட்டு புஷ்பா 2 படத்தின் டீசர் வெளியாகியிருக்கிறது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் அல்லு அர்ஜுன். அந்தத் திரையுலகில் அவர் ஃபேமஸாக இருந்தாலும் இந்திய அளவில் பெரிதாக கவனம் ஈர்க்காமல் இருந்தார். இப்படிப்பட்ட சூழலில் சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தில் நடித்தார். அந்தப் படம் பான் இந்திய லெவலில் வெளியாகி சுமார் 500 கோடி ரூபாய்வரை இந்தியா முழுவதும் வசூல் செய்தது. இதன் காரணமாக அவர் பான் இந்தியா ஸ்டாராக இப்போது அறியப்படுவது குறிப்பிடத்தக்கது.

புஷ்பா 2 க்ளிம்ப்ஸ்: முதல் பாகத்தின் பிரமாண்ட வெற்றியை அடுத்து படத்தின் இரண்டாவது பாகம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி படத்தின் ஷூட்டிங்கும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மும்முரமாக நடந்தது. கடந்த வருடம் படத்திலிருந்து க்ளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகின. அதில் இரவில் அல்லு அர்ஜுன் வருவது போன்றும், அவரது வருகையை மக்கள் கொண்டாடுவது போன்றும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதனைப் பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டடிக்கும் என்று உறுதியாக நம்பிக்கொண்டிருக்கின்றனர்.
எப்போது ரிலீஸ்: க்ளிம்ப்ஸை பார்த்த ரசிகர்கள் படம் எப்போது ரிலீஸாகும் என்ற ஆவலோடு காத்திருந்தனர். அவர்களுக்கு ஸ்வீட் செய்தியாக படமானது சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. புஷ்பா 2 ஆகஸ்ட் மாதம் ரிலீஸாகவிருப்பதாலும்; அந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருப்பதாலும்; பிற படங்களின் ரிலீஸுகள் தள்ளிப்போயிருப்பதாகவும் கூறப்படுகிறது.
புஷ்பா 2 டீசர்: சூழல் இப்படி இருக்க அல்லு அர்ஜுன் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் முதல் திரைப்பிரபலங்கள்வரை தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். புஷ்பா 2 படக்குழு சார்பாக அல்லு அர்ஜுனுக்கும் அவரது ரசிகர்களுக்கும் பிறந்தநாள் பரிசாக படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.
இத்தனை மில்லியன் பார்வைகளா: டீசரில் அல்லு அர்ஜுன் ஆக்ஷன் காட்சிகளில் அதகளம் செய்திருக்கிறார். இதனால் அவரது ரசிகர்களுக்கு தியேட்டரில் ட்ரீட் இருப்பது நிச்சயம். மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் புஷ்பா 2 படத்தின் டீசர்; வெளியாகி 24 மணி நேரத்தில் 30 மில்லியன் பார்வைகளை கடந்திருக்கிறது. மேலும் யூட்யூப் ட்ரெண்டிங்கில் முதலிடமும் வகித்துவருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் டீசருக்கே இப்படி என்றால் படத்துக்கு எவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்க காத்திருக்கிறதோ என்று மகிழ்ச்சியுடன் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். இப்படத்திலும் ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











