அப்பான்னு கூப்பிடாத... உங்கப்பா வருத்தப்படுவாரு... ரசிகைக்கு மாதவனின் அட்வைஸ்
சென்னை : நடிகர் மாதவன் நீண்ட ஆண்டுகளாக நாயகனாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளார்.
பாலிவுட்டில் முழுநேர நடிகராக மாறினாலும் தமிழிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
அவ்வப்போது சமூக வலைதளங்களில் ரசிகர்கடைய கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார்.

நடிகர் மாதவன்
நடிகர் மாதவன் அலைபாயுதே உள்ளிட்ட படங்களின்மூலம் ரசிகர்களை கொள்ளை கொண்டவர். முதல் படத்திலேயே மணிரத்னத்தின் இயக்கத்தில் நடித்ததால் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். இதில் ஏஆர் ரஹ்மானின் இசையும் முதல் படத்திலேயே இவருக்கு கிடைத்தது.

சாக்லேட் பாய் மாதவன்
தொடர்ந்து இவர் தமிழில் நடித்த பல படங்கள் இவருக்கு ஏற்றத்தையே கொடுத்தது. ஆரம்பத்தில் சாக்லேட் பாயாகவே வலம் வந்து ஏராளமான பெண் ரசிகைகளை பெற்றார். தொடர்ந்து லிங்குசாமியின் ரன் உள்ளிட்ட படங்கள் இவருக்கு ஆக்ஷன் ஹீரோ அந்தஸ்தை கொடுத்தது.

பாலிவுட் ஹீரோ
தொடர்ந்து பாலிவுட்டிற்கும் சென்று தன்னை சிறப்பான ஹீரோவாக நிலைநிறுத்திக் கொண்டார். 3 இடியட்ஸ் உள்ளிட்ட பாலிவுட் படங்கள் இவருக்கு மிகவும் சிறப்பாக அமைந்தது. தொடர்ந்து பாலிவுட்டில் மட்டுமின்றி தமிழிலும் படங்களில் நடித்து வருகிறார்.

ராக்கெட்ரி படம்
விக்ரம் வேதா படம் இவருக்கு தமிழில் மிரட்டலான இடத்தை கொடுத்துள்ளது. தொடர்ந்து மாறா படமும் வித்தியாசமான கோணத்தில் இவரை படம்பிடித்தது. இந்நிலையில் தற்போது தனது இயக்கம் மற்றும் நடிப்பில் ராக்கெட்ரி என்ற படத்தை உருவாக்கி வருகிறார்.

சமூக வலைதளங்களில் பிசி
புகழ்பெற்ற விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களிலும் தன்னை மிகவும் பிசியாக வைத்துக் கொள்கிறார் மாதவன். அவ்வப்போது பல அப்டேட்களை வழங்கி வருகிறார்.

அங்கிள் என்று கூப்பிட அட்வைஸ்
மேலும் ரசிகர்களிடம் உரையாடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ரசிகை ஒருவர் அவரை அப்பா என்று அழைக்க விரும்புவதாக தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த மாதவன் நகைச்சுவையாக தன்னை அங்கிள் என்று கூப்பிட முயற்சி செய்யும்படியும் தன்னை அப்பா என்று கூப்பிடுவதால் அந்தப் பெண்ணின் தந்தை புண்படுவதை தான் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மாதவனின் குறும்பான பதில்
மாதவனின் குறும்பான இந்த பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தன்னுடைய படங்களில் குறும்பான கேரக்டர்களை ஏற்று நடித்து வருகிறார் மாதவன். அவரது உடல்மொழியிலேயே அதை வெளிக்காட்டி ரசிகர்களையும் கவர்ந்து வருபவர் மாதவன்.


Click it and Unblock the Notifications











