மாதவன் அவர் மகனை எப்படி வளர்க்கிறார் தெரியுமா?.. வாரணம் ஆயிரம் அப்பாவே தோத்துடுவாரு

சென்னை: தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் என்று கொண்டாடப்பட்டவர் மாதவன். இப்போது அந்த இடத்துக்கு சில நடிகர்கள் வந்தாலும் அரவிந்த் சாமிக்கு அடுத்து அதிக பேரை கவர்ந்தது மாதவன்தான். இப்போது கதைக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் நடித்துவருகிறார். கடைசியாக துரந்தர் திரைப்படத்தில் முக்கியமான வேடத்தை ஏற்றிருந்தார். இந்நிலையில் அவர் தன் மகனை எப்படி வளர்க்கிறேன் என்பது குறித்து சமீபத்தில் கொடுத்த பேட்டியில் ஓபனாக பேசியிருக்கிறார்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அலைபாயுதே திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் மாதவன். அரவிந்த் சாமியின் எரா முடிந்தவுடனேயே மாதவன் எரா பெண் ரசிகைகள் மத்தியில் ஏற்பட்டது. கண்டிப்பாக அவரது கரியர் முழுக்க சாக்லேட் பாயாக மட்டுமே வலம் வருவார் என்றும் சிலர் கணித்தார்கள். ஆனால் அவரோ ரன், தம்பி என ஆக்ஷன் படங்களிலும் நடித்தார். அந்தப் படங்களும் அவருக்கு சூப்பரான வரவேற்பை கொடுத்தன. இதன் காரணமாக எந்த மாதிரியான படத்திலும் அவர் நடிப்பார் என்று எல்லோருக்கும் நம்பிக்கை பிறந்தது.

R Madhavan Opens Up About Parenting and Raising Son Vedant
Photo Credit:

திடீர் மார்க்கெட் அவுட்: தொடர்ச்சியாக ஹிட் படங்களில் நடித்த அவருக்கு வாழ்த்துகள், ஆர்யா என வரிசையாக தோல்வியை சந்தித்தன. இதன் காரணமாக நல்லபடியாக போய்க்கொண்டிருந்த அவரது மார்க்கெட் ஆடிவிட்டது. இதற்கிடையே ஹிந்தியிலும் நல்ல நல்ல படங்களில் நடித்து பான் இந்தியா ஆக்டர் ஆனார். மேலும் தமிழில் வேட்டை, விக்ரம் வேதா, இறுதிச்சுற்று என இரண்டாவது இன்னிங்ஸில் சூப்பர் நடிப்பை வெளிப்படுத்தினார். அதுமட்டுமின்றி இயக்குநராகவும் ஒரு படத்தை இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read
இரண்டாவது திருமணத்துக்கு பிறகு இப்படியா?.. சமந்தா என்ன அதிரடியா இறங்கிட்டாங்க
இரண்டாவது திருமணத்துக்கு பிறகு இப்படியா?.. சமந்தா என்ன அதிரடியா இறங்கிட்டாங்க

மாதவன் பேட்டி: இந்நிலையில் மாதவன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அவர் கொடுத்த பேட்டியில், "எனது மகன் வேதாந்த். அவருக்கு நான்கு வயதிலிருந்தே கருத்தடை போன்ற விஷயங்கலை வெளிப்படையாக பேச தொடங்கிவிட்டேன். குழந்தைகளிடம் சில விஷயங்களை மறைத்து வைப்பதைவிடவும், சரியான வயதில் சரியான விளக்கத்துடன் சொல்லிக்கொடுப்பது முக்கியம் என்று கருதுகிறேன். இந்த அணுகுமுறை காரணமாக எனது மகனுக்கு என் மீது அதீத நம்பிக்கையும், மரியாதையும் உருவானது.

பொறுப்பான இளைஞர்: அவர் அதனால்தான் பொறுப்பான இளைஞராக வளர தொடங்கினார். அதுதன் அவருக்கு உதவியது. இந்த அணுகுமுறை காரணமாக மகனுக்கு என் மீது அதீதமான நம்பிக்கையும், மரியாதையும் உருவானது. சினிமா பிரபலத்தின் வாரிசாக இருப்பதால் வரும் புகழின் இருண்ட பக்கங்கள், தேவையற்ற செல்வாக்குகள், பெண்களை மதித்து நடத்த அவசியம் உள்ளிட்டவைகளையும் சொல்லிக்கொடுத்தேன். குழந்தைகளை பாதுகாப்பாக வளர்ப்பது அவர்களுக்கான உலகத்தை மறைப்பது இல்லை. மாறாக வாழ்க்கையின் எதார்த்தங்களை முன்கூட்டியே புரிய வைப்பதுதான் கடமை" என்றிருக்கிறார்.

மாதவன் மகன் வேதாந்த்: முன்னதாக மாதவன் மகன் வேதாந்த் ஒரு நீச்சல் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் நடந்த போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தை வழியில் மகன் சினிமாவுக்குத்தான் நடிக்க வருவார் என்று எதிர்பார்த்தால் அவரது நீச்சல் ஆர்வம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X