மாதவன் பெயரை டாட்டூவாக்கிய ரசிகை... நெகிழ்ச்சியில் நடிகர்

சென்னை : கோலிவுட், பாலிவுட் என பல படங்களில் நடித்து வருபவர் நடிகர் மாதவன்.

தற்போது ராக்கெட்ரி நம்பி விளைவு என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இவருக்கு அதிகமான ரசிகர்கள் காணப்படும் நிலையில் இவரது பெயரை தனது கையில் ரசிகை ஒருவர் டாட்டூவாக குத்தியுள்ளார்.

பரபரப்பான நடிகர் மாதவன்

பரபரப்பான நடிகர் மாதவன்

நடிகர் மாதவன் கோலிவுட், பாலிவுட் என பல்வேறு படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்திய அளவில் மட்டுமின்றி உலக அளவில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். விக்ரம் வேதா உள்ளிட்ட பல தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இயக்குநர் அவதாரம்

இயக்குநர் அவதாரம்

இந்நிலையில் தற்போது ராக்கெட்ரி நம்பி விளைவு என்ற படத்தை முதல் முறையாக இயக்கி வருகிறார். இந்த படத்தில் லீட் கதாபாத்திரத்தில் மாதவனே நடித்து வரும் நிலையில் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி வெளியாக உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராக்கெட்ரி நம்பி விளைவு

ராக்கெட்ரி நம்பி விளைவு

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ள நிலையில் சமீபத்தில் இந்தப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகி வரவேற்பை பெற்றது. மிகுந்த அன்பு மற்றும் அக்கறையுடன் இந்தப் படத்தை உருவாக்கி உள்ளதாகவும் ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி என்றும் மாதவன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

ஏராளமான ரசிகர்கள்

ஏராளமான ரசிகர்கள்

மாதவனுக்கு ஏராளமான ரசிகர்கள் குறிப்பாக ரசிகைகள் அதிகளவில் காணப்படுகின்றனர். இதனிடையே சமீபத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த அவரது ரசிகை ஒருவர் தனது கையில் மாதவனின் பெயரை பச்சை குத்தியுள்ளார். மேலும் இது தற்காலிக டாட்டூ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நெகிழ்ந்த மாதவன்

நெகிழ்ந்த மாதவன்

அவரது இந்த செயலால் நெகிழ்ந்த மாதவன், அவருக்கு லவ் உள்ளிட்ட எமோஜிக்களை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரபரப்புடன் செயல்பட்டு வரும் மாதவன் முதல் முயற்சியாக இயக்கத்தில் ஈடுபட்டுள்ளார். அவரது படம் 5 மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X