அரசியல்வாதிகளுக்கு இனிமா கொடுக்கும் கமல் ஒரு தீவிரவாதியா?: என்ன சொல்றீங்க பார்த்திபன்
சென்னை: கமல் ஹாஸனின் பிறந்தநாளுக்கு நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் வித்தியசமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலக நாயகன் கமல் ஹாஸன் இன்று தனது 64வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாளையொட்டி #HappyBirthdayKamalHaasan என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பார்த்திபன்
கமல் ஹாஸனுக்கு வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்துள்ளார் பார்த்திபன். கமல் என்ற தீவிரவாதிக்கு மக்கள் தரப்போகும் அரசியல் அங்கீகாரத்திற்கு காத்திருக்கிறேன் வாழ்த்துகிறேன் என்று வாழ்த்தியுள்ளார்.
தீவிரவாதி
கமலை தீவிரவாதி என்று கூறியதற்கு அர்த்தம் சொல்லிவிடுங்கள். இல்லனா கண்ணு காது மூக்கு வாய் எல்லாம் வச்சு பேசிடுவாங்க என்று ஒருவர் பார்த்திபனிடம் கேட்டுள்ளார்.
வைரமுத்து
என் அருமை நண்பர் கமல்@ikamalhaasan
எந்தத் துறையைத் தொட்டாலும்
அதில் உச்சம் தொட்டு வளர்க!
அவர் பிறந்தநாளுக்கு
என் வளர்பிறை வாழ்த்துக்கள்! என்று கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்தியுள்ளார்.
ஸ்ருதி
அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் மகள் ஸ்ருதி ஹாஸன்.
விவேக்
உலக நாயகன் கமல் ஹாஸனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் விவேக்.


Click it and Unblock the Notifications











