ரஜினிக்காக ராஞ்ஹனா ஸ்பெஷல் ஸ்கிரீனிங்: டென்ஷனில் தனுஷ்
மும்பை: ராஞ்ஹனா படம் ரிலீஸாகும் முன்பு அதை ரஜினிகாந்துக்காக ஸ்பெஷலாக போட்டுக் காட்டுகிறார்களாம். படத்தை பார்த்துவிட்டு ரஜினி என்ன சொல்லப் போகிறார் என்ற டென்ஷனில் உள்ளாராம் தனுஷ்.
தனுஷ் முதன் முதலாக நடித்துள்ள இந்தி படம் ராஞ்ஹனா. இதில் அவருக்கு ஜோடியாக சோனம் கபூர் நடித்துள்ளார். முதல் படம் என்றாலும் தனுஷ் தானே இந்தியில் டப்பிங் பேசியுள்ளார்.
தனது இந்தியை கிண்டல் செய்யாமல் இருந்ததற்காக அவர் சோனம் கபூருக்கு நன்றி தெரிவித்துள்ளார். படம் வரும் 21ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

ரஜினிக்கு ஃபர்ஸ்ட்
படத்தை தனுஷின் மாமனார் ரஜினிகாந்துக்கு முதலில் போட்டுக் காட்டுகிறார்களாம். இதற்காக படத்தின் இயக்குனர் ஆனந்த் எல்.ராய் மற்றும் தயாரிப்பாளர் கிரிஷிகா லல்லா ஆகியோர் மும்பையில் இருந்து சென்னைக்கு வருகின்றனர்.

ஐஸும், சௌந்தர்யாவும்
படத்தை ரஜினியுடன் சேர்ந்து அவரது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் சௌந்தர்யா ஆகியோரும் பார்க்கவிருக்கின்றனர்.

டென்ஷனில் தனுஷ்
சூப்பர் ஸ்டார் படத்தை பார்த்துவிட்டு என்ன சொல்லப் போகிறாரோ என்ற டென்ஷனில் உள்ளாராம் தனுஷ்.


Click it and Unblock the Notifications











