அம்மா, அப்பாவ சாகடிக்க ஊருக்கு போகாதீங்க.. பாதுகாப்பா வீட்லயே இருங்க.. ராகவா லாரன்ஸ் வேண்டுகோள்!

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு பொதுமக்களும் ஆதரவு தர வேண்டுமென நடிகர் ராகவா லாரன்ஸ் வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Recommended Video

உன் கால விழுறேன் வெளிய போகாத | Lawrence Best advice | LockDown

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கி இதுவரை 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், சோகமான செய்தி என்னவென்றால், சுமார் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

பிரதமர் மோடி, நேற்று நள்ளிரவு 12 மணி முதல் முழு இந்தியாவையும் டோட்டல் ஷட் டவுன் செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.

அசால்ட்

அசால்ட்

நமக்கு கொரோனா வைரஸ் பாதிக்காது என்ற அலட்சியத்தில், இளைஞர்கள் பலர் பைக்கை எடுத்துக் கொண்டு வெளியே சுற்றுவதும், வீதியில் கிரிக்கெட், கேரம் போன்ற விளையாட்டுக்களை விளையாடுவதுமாக பொழுதை கழித்து வருகின்றனர். அலட்சியமாக வெளியே சுற்றும் நபர்களை போலீசார் கண்டித்து விரட்டி வருகின்றனர்.

அட்வைஸ்

அட்வைஸ்

கொரோனா வைரஸ் பாதிப்பை அறியமால் அலட்சியமாக சுற்றும் நபர்களால் மற்றவர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால், யாரும் வீட்டை விட்டு வெளியே வரவே வேண்டாம் என இந்தியா முழுவதும், பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என பல பிரபல நடிகர்களும், சமூக வலைதளங்களில் அட்வைஸ் கொடுத்து வருகின்றனர்.

ராகவா லாரன்ஸ்

இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் கொரோனா வைரஸ் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ள, பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க வலியுறுத்தி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஒருவர் ஊரில் இருக்கும் பெற்றோர்களை சந்திக்க செல்வதாக கூறும் போது, ஏன், அவங்களை சாகடிக்க போறியா? இருக்கிற இடத்துலயே பாதுகாப்பா இரு என அட்வைஸ் கூறியுள்ளார்.

சொந்த ஊர்களுக்கு

சொந்த ஊர்களுக்கு

கொரோனா தொற்று காரணமாக 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு இருப்பதால், வெளியூரில் வேலை பார்க்கும் இளைஞர்கள், சொந்த ஊருக்கு செல்ல கூட்டம் கூட்டமாக கிளம்பி செல்கின்றனர். அதில், யாருக்காவது கொரோனா தொற்று இருந்தால், ஒவ்வொரு ஊருக்கும் கொரோனா வைரஸ் சென்று சேரும் அபாயம் இருப்பதால், பயணத்தை தவிர்ப்பதே ஒரே வழி என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X