மகாவதார் நரசிம்மா படத்தை பார்த்து கண் கலங்கிப் போயிட்டேன்.. குடும்பத்துடன் படம் பார்த்த ராகவா லாரன்ஸ்!

சென்னை: 150 கோடிக்கும் மேல் வசூல் சாதனையை படைத்து சக்கைப்போடு போட்டு வரும் மகாவதார் நரசிம்மா படத்தை குடும்பத்துடன் பார்த்த நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் அந்த படத்தின் சில காட்சிகளை பார்க்கும் போது கண்கலங்கி விட்டதாக பதிவிட்டுள்ளார்.

தெலுங்கில் விஷ்ணு மஞ்சு நடிப்பில் வெளியான கண்ணப்பா படத்தில் அக்‌ஷய் குமார், பிரபாஸ், மோகன்லால், மோகன் பாபு, சரத்குமார் என பல நட்சத்திரங்கள் நடித்தும் படத்தில் பக்தி இல்லை என்றும் ப்ரீத்தி முகுந்தனின் கவர்ச்சி தான் தெரிந்தது என பக்தர்கள் அந்த படத்தை புறக்கணித்து விட்டனர்.

Raghava Lawrence says he shed tears after seeing Mahavatar Narasimha with his family
Photo Credit:

ஆனால், அனிமேஷன் படமாக இருந்தாலும், மகாவதார் நரசிம்மா திரைப்படம் தரமானதாக உள்ளதாகவும் பகவான் விஷ்ணுவின் அவதார கதையை அல்டிமேட்டாக விஷுவலைஸ் படுத்தியுள்ளனர் என பலரும் கொண்டாட தலைவன் தலைவி படத்தை விட மகாவதார் நரசிம்மா படம் பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பி வருகிறது.

15 கோடியில் எடுக்கப்பட்டு: ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஜெயபூர்ணா தாஸ் திரைக்கதையில் அஸ்வின் குமார் இயக்கத்தில் கடந்த ஜூலை 25ம் தேதி வெளியான மகாவதார் நரசிம்மா திரைப்படம் வெறும் 15 கோடிக்கும் குறைவான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு பாக்ஸ் ஆபீஸில் 150 கோடிக்கும் அதிகமான வசூலை வாரிக்குவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹனுமான் படத்தைத் தொடர்ந்து ஆன்மிக படமான இந்த படத்தையும் தெலுங்கு மற்றும் இந்தி ரசிகர்கள் கொண்டாடிய நிலையில், பெரிய பாக்ஸ் ஆபீஸ் வேட்டையை மகாவதார் நரசிம்மா எடுத்துள்ளது.

காஞ்சனா 4ல் பிஸி: தம்பி எல்வினை புல்லட் படத்தின் மூலம் அறிமுகப்படுத்த காத்திருக்கும் ராகவா லாரன்ஸ் அடுத்து தான் இயக்கி நடிக்கும் காஞ்சனா 4 படத்தின் ஷூட்டிங்கிலும் பிசியாக உள்ளார். இந்நிலையில், அதன் காரணமாகத்தான் மகாவதார் நரசிம்மா படத்தை தாமதமாக பார்த்தேன் என்றும் படக்குழுவினரிடம் மன்னிப்புக் கேட்டும் பதிவிட்டுள்ளார்.

கண்கலங்கிட்டேன்: அம்மா மற்றும் தம்பி எல்வினுடன் இணைந்து ராகவா லாரன்ஸ் மகாவதார் நரசிம்மா படத்தை தியேட்டரில் பார்த்த நிலையில், போட்டோ ஒன்றை ஷேர் செய்து, ஒட்டுமொத்த மகாவதார் நரசிம்மா படக்குழுவுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். எனக்கு மிகப்பெரிய தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸை இந்த படம் கொடுத்தது. கடவுள் பக்தனான எனக்கு இந்த படம் பல இடங்களில் கனெக்ட் ஆனது. பல இடங்களில் கண்களில் இருந்து கண்ணீரும் வந்துவிட்டது. அந்தளவுக்கு அருமையாக படத்தை உருவாக்கி இருக்கிறீர்கள் என பாராட்டியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X