Raghava Lawrence: இந்த புள்ள எல்லாத்தையும் மாத்திடுச்சு.. ரஜினிக்கு நோ சொன்ன அம்மா.. விஜய்க்கு யெஸ்!

சென்னை: நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் விஜய்யின் தவெக கட்சியில் இணைந்து திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டிப் போட முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில், அரசியலுக்கு வரும் தனது முடிவையும் அதற்கு அம்மா கொடுத்த க்ரீன் சிக்னலையும் வீடியோ மூலம் ராகவா லாரன்ஸ் ஒரு குட்டிக் கதையுடன் சொல்லியுள்ளார்.

ஆரம்பத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்த போதே அவருடன் சேர்ந்து அரசியலில் பயணிக்க முடிவு செய்தேன். என்னால முடிந்தளவுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கும் கஷ்டப்படும் மக்களுக்கும் உதவிகள் செய்துகிட்டு வருகிறேன்.

Raghava Lawrence says his Mother gives green signal to join Vijay s TVK Party

ஆனால், பல சமயங்களில் அதிகளவில் உதவிகளை செய்ய வேண்டுமென்றால் பிறரிடம் கேட்கும் சூழல் உருவாகிறது. தலைவர் அரசியலுக்கு வந்துவிட்டால் தாராளமாக நன்மைகள் செய்யலாமே என நினைத்தேன். ஆனால், அப்போது அம்மா வேண்டவே வேண்டாம் என சொல்லிவிட்டார் என்றார் ராகவா லாரன்ஸ்.

அரசியல் ஒரு சாக்கடை: அரசியலில் சாதாரண மக்கள் வரவே முடியாது. பணம் படைத்தவர்கள் மற்றும் வாரிசுகள் மட்டுமே அரசியல் பண்ண முடியும். அதெல்லாம் வேண்டாம், அது ஒரு சாக்கடை என அம்மா சொல்லிவிட்டார். அதே போல தலைவரும் அரசியலுக்கு வராத நிலையில், அந்த ஆசையை அப்படியே விட்டு விட்டேன். என்னோட நண்பர் விஜய் அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்னதும் மீண்டும் அம்மாவிடம் ஓடிப்போய் விஜய் அரசியலுக்கு வரார்ம்மா, இப்பையாவது போகட்டுமா? என்றேன். ஆனால், மீண்டும் அரசியல் ஒரு சாக்கடை புதியவர்களை வரவோ வளரவோ விடமாட்டார்கள் என்று எச்சரித்தார்.

Raghava Lawrence says his Mother gives green signal to join Vijay s TVK Party

வரலாற்றை மாற்றிய விஜய்: ஆனால், என் நண்பன் களத்தில் இறங்கி புயல் போல உழைத்து அத்தனையையும் மாற்றி புதிய வரலாறு படைத்து முதலமைச்சராக மாறிய உடனே அம்மாவிடம் ஓடினேன். என்னம்மா சொன்ன, பணம் தான் இங்கே ஜெயிக்கும். நல்லவங்களும் நல்லா உழைக்கிறவங்களையும் மக்கள் ஏத்துக்க மாட்டாங்கன்னு சொன்னியே, இப்போ பார்த்தியாம்மா என்று பெருமையுடன் சொன்னேன். அம்மா முகத்தில் லைட்டா சிரிப்பு வந்துச்சு. ஆமாம்ப்பா அந்த புள்ள எல்லாத்தையும் மாத்திடுச்சு என்றார்.

நீங்க சொல்லுங்க: நான் அரசியலுக்குள் நுழைய என் அம்மா தடுத்து வந்தார். ஆனால், அம்மாவை மீறி நான் வரலாம். ஆனால், உருப்பட மாட்டேன். இப்போ அம்மா சம்மதித்து விட்டார். அவங்களுக்கு அடுத்து எனக்கு ரொம்பவே முக்கியமானவர்கள் என் ரசிகர்கள் நீங்கள் தான். நீங்க சொல்லுங்க, அரசியலுக்கு நான் வரட்டா வேணாமான்னு. நீங்க வேண்டாம்னு சொன்னால், நான் கண்டிப்பா வரமாட்டேன். வா அண்ணா பார்த்துக்கலாம், வா தம்பின்னு சொல்லுங்க உங்களுக்கு சேவை செய்ய இந்த ராகவா லாரன்ஸ் ஓடி வரேன் என்று தனது அரசியல் நிலைப்பாடு குறித்து உணர்ச்சி பொங்க பேசி ரசிகர்களிடம் ரெக்வஸ்ட் வைத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X