»   »  ரஜினியின் வந்தேமாதரம்!

ரஜினியின் வந்தேமாதரம்!

Subscribe to Oneindia Tamil

வந்தேமாதரம் பாடலை அடிப்படையாக வைத்து தெலுங்கில் எடுக்கப்படவுள்ளபடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், மெகா ஸ்டார் சிரஞ்சீவியும் நடிக்கவுள்ளதாககூறப்படுகிறது.

பங்கும் சந்திரசாட்டர்ஜி 19வது நூற்றாண்டில் இயற்றிய பாடல்தான் வந்தேமாதரம்.தேச பக்தியை தூண்டும் இந்தப் பாடல் உருவாகி வருகிற 7ம் தேதியுடன் 100ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதையொட்டி நாடு முழுவதும் சிறப்புநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்பாடல் சில ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதும் மீண்டும் பிரபலமடைந்தது.அதற்குக் காரணம் ஏ.ஆர்.ரஹ்மான். அவரது இசையில் வெளியான வந்தேமாதரம்பாடல் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஒலித்தது.

இப்போது வந்தே மாதரம் பாடலை அடிப்படையாக வைத்து தெலுங்கில் படம் ஒன்றுஎடுக்கப்படவுள்ளது. கல்யாண் சக்ரவர்த்தி என்ற இயக்குநர் தான் இப்படத்தைஇயக்கப் போகிறார். இப்பாடலின் கதையை இப்படத்தில் விவரிக்கப் போகிறாராம்கல்யாண்.

கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா ஆசிர குருவாக நடிக்கவுள்ளார். அவரதுசிஷ்யர்களாக இரு பிரபலங்களை நடிக்க வைக்கிருக்கிறார் கல்யாணம். அவர்கள்வேறு யாரும் அல்ல, ரஜினியும், சிரஞ்சீவியும் தான். பாலமுரளி கிருஷ்ணாவேஇசையையும் கவனிக்கிறார்.

ரஜினி இந்த வேடத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டாரா என்பது அதிகாரப்பூர்வமாகதெரியவில்லை. ஆனாலும் வந்தேமாதரம் குறித்த படம் என்பதால் ரஜினிநடிக்கக்கூடும் எனத் தெரிகிறது.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil