»   »  சத்ய நாராயணாவுக்குரஜினி ரசிகர்கள் வார்னிங்

சத்ய நாராயணாவுக்குரஜினி ரசிகர்கள் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

கோவைக்கு வரும் ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயணாவுக்கு கருப்பு கொடிகாட்டுவோம் என மன்றத்திலிருந்து நீக்கப்பட்ட கோவை ரஜினி மன்ற நிர்வாகிகள்அறிவித்துள்ளனர்.

தமிழக சட்டசபை தேர்தலின் போது குறிப்பிட்ட எந்த கட்சிக்கும் ஆதரவாக வேலைசெய்யக் கூடாது என்று தனது ரசிகர்மன்றத்தினருக்கு நடிகர் ரஜினிகாந்த்அறிவுறுத்தியிருந்தார். ஆனால் சிலர் அதிமுகவுக்கு ஆதரவாக வேலை செய்தனர்.

இதைத் தொடர்ந்து அவர்கள் ரஜினி மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டனர். அதன்அடிப்படையில் கோவை மாவட்டத்தில் தலைமை ரஜினி மன்றத்தை சேர்ந்த அப்பு,பாண்டியன், முபாரக் மற்றும் கிளை மன்ற நிர்வாகிகள் பலர் நீக்கப்பட்டனர்.

இதற்கு நீக்கப்பட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் வியாழக்கிழமைகோவை சிங்காநல்லூரில் நடைபெறும் ஒரு கோவில் விழாவில் அகில இந்திய ரஜினிமன்ற தலைவர் சத்யநாராயணா கலந்து கொள்கிறார்.

இதையடுத்து, தங்களை மன்றத்திலிருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்துசத்யநாராயணாவுக்கு கருப்புக்கொடி காட்ட முடிவு செய்துள்ளனர். கருப்பு சட்டை,கறுப்பு பேண்ட் அணிந்து இப்போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அவர்கள்தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மன்றத்தில் இருந்த நீக்கப்பட்ட அபு, பாண்டியன், முபாரக் ஆகியோர்நிருபரிடம் கூறியதாவது,

கடந்த 12 வருடங்களாக ரஜினியை சந்திக்க முடியவில்லை. அகில இந்திய ரஜினிமன்ற தலைவர் சத்யநாராயணா இதற்கு தடையாகவுள்ளார். மேலும் தலைவர் ரஜினிசத்யநாராயணாவை மாவட்ட வாரியாக அனுப்பி மன்ற நிர்வாகிகள் மற்றும்ரசிகர்களின் குறை அறிய அவர்களை சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஆனால் இதுவரை ரசிகர்களை அவர் சந்திக்கவில்லை. கோவை மாவட்டத்துக்குதொழில் ரீதியாக வந்து செல்கிறார். ரசிகர்களை சந்திப்பதில்லை. ஆகையால் நாளைகோவை மாவட்டம் வரும் சத்யநாராயணாவுக்கு எதிப்பு தெரிவிக்கும் வகையில்கறுப்பு உடை அணிய உள்ளோம்.

மேலும் அவருக்கு கறுப்பு கொடி காட்டவும் தயங்க மாட்டோம். இந்த போராட்டத்தைகோவை மாவட்டம் மற்றும் கிளை மன்றங்களில் இருந்து நீக்கப்பட்ட ரஜினி ரசிகர்கள்மற்றும் எங்களுக்கு ஆதரவாக இருக்கின்ற ரசிகர்களும் ஓன்று சேர்ந்துநடத்தவுள்ளோம் என அவர்கள் தெரிவித்தனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil