நேராக வரும் ராஜசேகர்!

By Staff


உடம்பு எப்படியிருக்கு படத்துக்கு நல்ல ஓபனிங் கிடைத்துள்ளால் சந்தோஷமாகியுள்ள டாக்டர் ராஜசேகர் அடுத்து நேரடியாக ஒரு தமிழ்ப் படத்தில் நடிக்கவுள்ளார். இதையும் மனைவி ஜீவிதாவே இயக்கவுள்ளார்.

Click here for more images

சுத்தமான தமிழ்நாட்டுக்காரரான ராஜசேகர், டாக்டருக்கு படித்து விட்டு வேலை பார்த்து வந்தார். பாரதிராஜாவால் புதுமைப் பெண் படத்தின் மூலம் நடிகரானவர்.

தமிழில் சில படங்களில் நடித்த அவர் அப்படியே தெலுங்குக்குப் போய் விட்டார். தெலுங்கில் அதிரடி ஹீரோவாக வெற்றி பெற்ற டாக்டர் ராஜசேகரின் பல படங்களில் தமிழுக்கு டப் ஆகி வந்துள்ளன.

இதுதாண்டா போலீஸ்தான் ராஜசேகரை தமிழிலும் பிரபலமாக்கியது. இதைத் தொடர்ந்து அடா, புடா என்று முடியும் வகையில் படு வித்தியாசமான டைட்டில்களை வைக்க ஆரம்பித்தார் ராஜசேகர். அது மிகவும் பிரபலமாகி மற்ற டப்பிங் படங்களுக்கும் அதே பாணியில் பெயர் வைக்க ஆரம்பித்து விட்டனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கேரளத்து சம்ருத்தாவுடன் ஜோடி போட்டு உடம்பு எப்படியிருக்கு படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார் ராஜசேகர்.

இப்படம் தெலுங்கில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம். இப்போது தமிழிலும் நல்ல ஓபனிங் கிடைத்திருப்பதால் ராஜசேகர் சந்தோஷமாக உள்ளார்.

இப்படத்தை ராஜசேகரின் மனைவி ஜீவிதாவே இயக்கியுள்ளார். ராஜசேகரின் தம்பியான நடிகர் செல்வாதான் (இவர் மாஜி மந்திரி இந்திரகுமாரியின் மருமகன்) படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். இது ஒரு குடும்பத் தயாரிப்பு.

இந்தப் படம் வெற்றி பெற்றிருப்பதால் அடுத்து நேரடியாக ஒரு தமிழ்ப் படத்தில் தீர்மானித்துள்ளாராம் ராஜசேகர். இப்படத்தையும் ஜீவிதாவே இயக்குவார்.

இதுகுறித்து ராஜசேகர் கூறுகையில் இதுதாண்டா போலீஸ் படத்துக்குப் பின்னர் தமிழில் எனக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் உருவானது. தொடர்ந்து வந்த எவனா இருந்தா எனக்கென்ன, மீசைக்காரன் ஆகிய படங்களும் நல்ல வெற்றியைப் பெற்றன.

தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களின் அன்பையும், ஆதரவையும் பெற்றதற்காக நான் சந்தோஷப்படுகிறேன்.

விரைவில் நேரடியான தமிழ்ப் படத்தில் நடிக்கப் ேபாகிறேன். இதுவும் ரசிகர்களுக்கேற்ற வகையில் விருந்து படைக்கக் கூடிய படமாக இருக்கும் என்றார் ராஜசேகர்.

இதுதாண்டா படம் என்று கூறும் அளவுக்கு அசத்தலா எடுங்க!

More from Filmibeat

Read more about: jeevitha rajasekar
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X