»   »  ராஜேஷ் இயக்கத்தில் மீண்டும் கமல் ஹாஸன்!

ராஜேஷ் இயக்கத்தில் மீண்டும் கமல் ஹாஸன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சபாஷ் நாயுடு படத்துக்குப் பிறகு கமல் ஹாஸன் நடிக்கும் புதிய படத்தை ராஜேஷ் எம் செல்வா இயக்குகிறார்.

கமல் ஹாஸன் இயக்கிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் ராஜேஷ் எம் செல்வா. பின்னர் கமல் தயாரித்த தூங்கா வனம் படத்தை இயக்கினார்.

ராஜீவ் குமார்

ராஜீவ் குமார்

இப்போது கமல் ஹாஸன் நடிக்கும் புதிய படம் "சபாஷ் நாயுடு". மலையாள பட இயக்குனர் டி.கே.ராஜீவ்குமார் இயக்கும் இந்த படத்தில் ஸ்ருதிஹாசனும் நடிக்கிறார்.

அமெரிக்காவில்...

அமெரிக்காவில்...

இதன் 80 சதவீத படப்பிடிப்பு அமெரிக்காவில் நடக்கிறது. இதனால் கமல் உள்ளிட்ட படக்குழுவினர் இன்று அமெரிக்கா புறப்படுகிறார்கள். ஜூன் கடைசியில்தான் திரும்புகிறார்கள்.

ஜூலைக்குள்

ஜூலைக்குள்

இந்தியாவில் 20 சதவீத படப்பிடிப்பு நடக்கிறது. ஜூலை மாதத்துக்குள் சபாஷ் நாயுடு படப்பிடிப்பு பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

தயாரிப்பு நிர்வாகி

தயாரிப்பு நிர்வாகி

இந்தப் படத்தின் தயாரிப்பு நிர்வாகியாக இப்போது ராஜேஷ் பணியாற்றி வருகிறார். இந்தப் படம் முடிந்ததும் புதிய படத்தை கமல் ஹாஸனை வைத்து இயக்குகிறார். இதையும் கமல்தான் தயாரிக்கிறார்.

ஆகஸ்டில்

ஆகஸ்டில்

அடுத்து இவர் இயக்கும் கமல் படத்தின் வேலைகளை ஆகஸ்டு மாதம் தொடங்குகிறார். இந்த படத்தை தீபாவளிக்கு திரையிட திட்டமிடப்பட்டுள்ளனர்.

English summary
Thoongavanam fame Rajesh M Selva is going to direct Kamal Hassan

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil