ஹீரோ .. ஹீரோ ..
கோடம்பாக்கத்தில் இருந்து காணாமல் போன கார்த்திக் மீண்டும் நடிக்கிறார்.
வயதுக்கேற்ற கேரக்டர்களுக்காக காத்திருந்தார். ஆனால், ஏதும் வரவில்லை. இதனால் மீண்டும் மரத்தை சுற்றி ஓடிகாதலிக்க முடிவு செய்துவிட்டார்.
அவரை வைத்து ஆம்னி இன்டர்நேசனல் நிறுவனம் அடுத்த படத்தைத் தயாரிக்கிறது.
படத்தின் பெயர் இன்று.படத்தை இயக்கப் போவது நவீன் முத்துராமன். இசை தேவா என்று முடிவாகியிருக்கிறது.
இந்தி, தெலுங்கில் நடித்து வரும் தனு ராயை இழுத்து வந்து ஹீரோயின் ஆக்கப் போகிறார்கள். மீண்டும் ஒரு காதல்கதை தானாம்.
ஹீரோவாகிறார் குஷ்புவின் தம்பி
காதல் வைரஸ் படத்தின் மூலம் ஹீரோவான ஷாலினியின் தம்பி ரிச்சர்டைத் தொடர்ந்து குஷ்புவின் தம்பி, ரீகன்என்ற பெயரில் ஹீரோவாக அறிமுகமாகிறார். இவர் தென் ஆப்பிரிக்க தமிழ் டெலி பிலிம் ஒன்றிலும் சிலவிளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் தென் ஆப்பிரிக்க தமிழ் டெலி பிலிம் ஒன்றிலும் சில விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார்.
இப்போது தமிழில் அறிமுகமாகிறார். படத்தின் பெயர் பெளர்ணமி. மும்பையைச் சேர்ந்த சோனாலி சச்தேவ்என்பவர் ஹீரோயினாகிறார்.
இவர் ஏற்கனவே சில தெலுங்குப் படங்களில் துணை கேரக்டர்களில் நடித்தவர் தான்.
கிரன் சக்கரவர்த்தி என்பவர் படத்தை எழுதி இயக்கப் போகிறார்.


Click it and Unblock the Notifications











