ரஜினி ஆடிய ராக்!
ரஜினியின் சிவாஜி படு வேகமாக வளர்ந்து வருகிறது. சமீபத்தில் சென்னை பின்னிமில் வளாகத்தில் ஒரு பாடலை படமாக்கினார் ஷங்கர். இந்த பாட்டுக்கு ராக் டான்ஸ்ஆடி கலக்கியுள்ளார் ரஜினி.
இந்தப் பாடலுக்கு டான்ஸ் செட் செய்தவர் ராகவேந்திரா லாரன்ஸ். ஏற்கனவே பாபாபடத்தில் ஒரு பாட்டுக்கு கோரியாகிராபி செய்திருந்தார் லாரன்ஸ். சிவாஜியில்ரஜினியும், ஷ்ரேயாவும் ஆடியுள்ள இந்தப் பாட்டு படு கலக்கலாக வந்துள்ளதாம்.
ஷங்கர் படத்திற்கு லாரன்ஸ் ஒர்க் செய்வது இதுதான் முதல் தடவையாம். இந்தப்படத்திற்ாக லாரன்ஸை ஷங்கர் கூப்பிட்டபோது முனி பட வேலைகளில் பிசியாகஇருந்தார் லாரன்ஸ் (இப்படத்தை லாரன்ஸ்தான் இயக்குகிறார்).
ஆனால், ரஜினி படம் என்பதால்மறுக்காமல் ஓடி வந்துவிட்டாராம்.
ராக் டான்ஸின் கஷ்டமான மூவ்மென்ட்களையும்படு கூலாக ஆடினார் ரஜினி.
ஷ்ரேயாவும் உடன் ஆடியிருக்கிறார். இந்தப் பாட்டு ரசிகர்களுக்கு நல்ல விருந்தாகஅமையும் என்கிறார் லாரன்ஸ்.


Click it and Unblock the Notifications