»   »  பர்ந்து பர்ந்து அடித்த ரஜினி!

பர்ந்து பர்ந்து அடித்த ரஜினி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவாஜி படத்திற்காக ரஜினிகாந்த் பறந்து பறந்து சண்டை போட்ட சூடான காட்சியை கோலார் அருகே இயக்குனர்ஷங்கர் படமாக்கினார்.

சிவாஜி படத்தின் ஷூட்டிங் தற்போது கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் முல்பாகல் என்ற இடத்தில் நடந்துவருகிறது. அங்குள்ள ஜூனியர் கல்லூரி மைதானத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது.

கல்லூரி மைதானத்தின் நடுவே ஒரு ஹெலிகாப்டர் இறங்கியது. அதிலிருந்து ரஜினி போன்ற தோற்றமுடையஒருவர் டிப் டாப் உடையுடன் இறங்கி வந்தார். இந்தக் காட்சியை நான்கு முறை படமாக்கினார் ஷங்கர். அந்தநபர் ரஜினிக்கு டூப்பாக நடித்தார்.

இதேபோல ரஜினியும், வில்லனின் அடியாட்களும் மோதும் சூடான சண்டைக் காட்சியையும் இங்குபடமாக்கினார் ஷங்கர். வில்லனின் ஆட்களை ரஜினி பறந்து பறந்து அடிப்பது போல காட்சி படமாகக்ப்பட்டது.

ரஜினி ஷூட்டிங்கைக் காண பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் அப்பகுதியில் குழுமி விட்டதால் பெரும் நெரிசல்ஏற்பட்டது. கல்லூரி மைதானத்தைச் சுற்றிலும் உள்ள கட்டடங்களின் மேலிருந்தும் ரசிகர்கள் படப்பிடிப்பைபார்த்து ரசித்தனர். சிலர் உள்ளே நுழைய முயற்சித்தனர். அவர்களை போலீஸார் லேசான தடியடி நடத்திக்கலைத்தனர்.

இதனால் கோபமடைந்த ரசிகர்கள் போலீஸாருடன் மோதலிலும், கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

முல்பாகல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 3 நாட்களுக்கு படப்பிடிப்பை நடத்துகிறார் ஷங்கர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil