»   »  சூப்பர் ஸ்டார் பிறந்த நாள்!

சூப்பர் ஸ்டார் பிறந்த நாள்!

Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 57வது பிறந்த நாளை அவரது ரசிகர்கள் நேற்று படு உற்சாகமாக கொண்டாடினர்.

ரஜினிக்கு நேற்று 56 வயது முடிந்த 57 வயது பிறந்தது. வழக்கமாக பிறந்த நாளின்போது ஊரில் இருக்க மாட்டார்ரஜினி. பெங்களூருக்கோ அல்லது வெளிநாடுக்கோ அல்லது இமயமலைக்கோ கிளம்பிப் போய் விடுவார்.

ரசிகர்கள்தான் ரஜினியின் பிறந்த நாளை செலவு செய்து, பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி, நலத் திட்டஉதவிகளை அளித்துக் கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு பிறந்த நாளின்போதும் ரஜினி சென்னையில்இல்லை. பெங்களூரில்தான் இருந்தார். ஆனால் இம்முறை ஷூட்டிங்குக்காக பெங்களூரில் தங்கியுள்ளார்.

வழக்கம் போல பிறந்த நாளை ரசிகர்கள் அமர்க்களப்படுத்தி விட்டனர். ரஜினி பெயரில் கோவில்களில் சிறப்புபூஜைகள் நடத்தப்பட்டன. மேலும், இலவச வேட்டி, சேலை வழங்குதல், புத்தகங்கள் வழங்குதல் என ரசிகர்கள்நலத் திட்ட உதவிகளையும் வழங்கினர். அன்னதானம் நடந்தது.

தலைவர் பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். ஆனால் ரசிகர்களை எப்போது ரஜினி கொண்டாடப்போகிறாரோ?

சந்திரமுகி 608:

ரஜினியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை சந்திரமுகி படத்தைப் பார்த்து ரசிகர்கள் அமர்க்களப்படுத்தினர்.ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் மறக்க முடியாத படமான சந்திரமுகி, வசூலில் சக்கை போடு போட்டது.சென்னை சாந்தி திரையரங்கில் (சிவாஜியின் தியேட்டர்) தொடர்ந்து 608 நாட்களாக ஓடி வருகிறது சந்திரமுகி.

இதற்கு முன்பு அதிக நாட்கள் ஓடிய படம் தியாகராஜ பாகவதரின் ஹரிதாஸ் மட்டுமே. அப்படம் 768 நாட்கள்ஓடி அமர்க்களப்படுத்தியது. அந்த சாதனையை தற்போது ரஜினி நெருங்கிக் கொண்டிருக்கிறார்.

சாந்தி தியேட்டரில் முதலில் 365 நாட்கள் நான்கு காட்சிகளாக ஓடிக் கொண்டிருந்தது. தொடர்ந்து கூட்டம் வந்துகொண்டிருப்பதால் இப்படத்தை நிரந்தரமாக போட்டு விட்டனர். இப்போது பகல் காட்சியாக சந்திரமுகி ஓடிக்கொண்டிருக்கிறது.

கடந்த ஆண்டு தமிழ்ப் புத்தாண்டுக்கு சந்திரமுகி ரிலீஸ் ஆனது. தொடர்ந்து சந்திரமுகி ஓடி வருவதுதிரையுலகினரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. சாந்தி தியேட்டரில் மொத்தம் 520 பேர் அமர்ந்து படம் பார்க்கலாம்.தினசரி சராசரியாக 250 பேர் வருகிறார்களாம். எனவே படத்தை தொடர்ந்து ஓட்டிக் கொண்டிருக்கிறார்களாம்.

இதற்கு முன்பு ரஜினி படங்களிலேயே அதிக நாட்கள் ஓடிய படம் பாட்ஷாதான். இப்படம் 368 நாட்கள் ஓடியது.இப்போது சந்திரமுகி அதை முறியடித்து விட்டது.

Read more about: rajini s birthday

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil