»   »  சூப்பர் ஸ்டாருக்கு மொட்டை

சூப்பர் ஸ்டாருக்கு மொட்டை

Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 57வது பிறந்த நாளை அவரது ரசிகர்கள் நேற்று படு உற்சாகமாக கொண்டாடினர்.

சிவாஜிக்காக மொட்டை போட்டு மிரட்டலாக நடித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

சிவாஜி படத்தின் கிளைமேக்ஸ் நெருங்கி விட்டது. அதாவது படப்பிடிப்பு கிட்டத்தட்டமுடிவை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. முக்கிய கிளைமாக்ஸ் காட்சியை வருகிற23ம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை பெங்களூரில் படமாக்கப்படவுள்ளது.

அதற்கு முன்பாக ஒரு சூப்பர் காட்சியை புனேவில் வைத்து சுட்டுள்ளார் ஷங்கர்.அதாவது ரஜினி தலையை பளபளவென மொட்டை அடித்து, மொட்டை கெட்டப்பில்ரஜினி நடித்த காட்சிகளை புனேவில் படமாக்கியுள்ளாராம் ஷங்கர்.

மொட்டைத் தலை, தாவாக் கட்டையில் குஞ்சு தாடி (அதாவது பிரெஞ்சு தாடி) எனகலக்கலான கெட்டப்பில் ரவுசாக நடித்துள்ளாராம் ரஜினி. மொட்டை போட்டு நடிப்பதுபோல ஒரு சீன் வைத்துள்ளேன், முடியுமா என்று ரஜினியிடம் ஷங்கர் கேட்டபோது,சற்றும் தயங்காமல் ஓ.கே. சொல்லி விட்டாராம் ரஜினி.

சந்தோஷமாகிப் போன ஷங்கர் இந்தக் காட்சியை படு கலக்கலாக திட்டமிட்டுபடமாக்கியுள்ளார். காட்சி அருமையாக வந்த திருப்தியில் ரஜினி உள்ளிட்டோர்சென்னை திரும்பியுள்ளனர்.

பெங்களூரில் கிளைமாக்ஸ் காட்சியை படமாக்கிய பின்னர் ரஜினியும், ஷ்ரியாவும்அமெரிக்காவுக்கு செல்கின்றனர். அங்கு சில முக்கிய காட்சிகளை படமாக்கவுள்ளார்ஷங்கர். உண்மையில் அமெரிக்க காட்சிகள்தான் படத்தில் முதலில் வருமாம். அதன்பிறகு இந்தியாவில் எடுக்கப்பட்ட காட்சிகள் இடம்பெறுமாம்.

சரி, ஷ்ரியா குறித்த ஒரு கிசுகிசு. சிவாஜி பட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஒரு முக்கிய நபர்அடிக்கடி வந்து செல்கிறாராம். அவரைப் பார்த்ததும் ஷ்ரியாவின் முகம் அன்றலர்ந்ததாமரை போல மலர்ச்சியாகி விடுகிறதாம். அவரை பார்த்தபடியே காட்சிகளில்நடிப்பதால் சில நேரம் டேக்குக்கு மேல் டேக் போகி விடுகிறதாம்.

இதையடுத்து ஷிரியாவைக் கூப்பிட்ட ஷங்கர், அவர் வருவது சரி, பேசுவது சரி,கொஞ்சம் முக்கியமான காட்சிகள் படமாக்கப்படும்போது மட்டும் வரக் கூடாது என்றுசொல்லி விடுங்கள் என்று கண்டிஷனாக சொல்லி விட்டாராம்.

இதனால் அந்த பார்ட்டி இப்போது ஷூட்டிங் ஸ்பாட் பக்கம் எட்டிப்பார்ப்பதில்லையாம். அவர் யாருன்னு சொல்லலையே, மும்பையைச் சேர்ந்த அவர்ஷிரியாவை உசுருக்கு உசுராக நேசிக்கிறாராம்.

இதை ஷங்கரிடமும், ரஜினியிடம் சொல்லித்தான் அவரை ஷூட்டிங் ஸ்பாட்டுக்குள்நுழைய அனுமதி வாங்கியிருந்தாராம் ஷிரியா. ஆனால் வந்தவர், ஷ்ரியாவின்நடிப்பைப் பாதிக்கும் அளவு காதல் கனைகளை ஏவியதால் இப்போது பேக்கப்செய்யப்பட்டு விட்டாராம்.

Please Wait while comments are loading...