»   »  சிவாஜியிடம் பிரமித்த ரஜினி!

சிவாஜியிடம் பிரமித்த ரஜினி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவாஜி படத்திற்கு டப்பிங் பேச வந்த ரஜினிகாந்த் படத்தின் காட்சிகளைப் பார்த்து பிரமித்துப் போய் விட்டராம். அட, இதுநான்தானாப்பா என்று ஆச்சரியமாகக் கேட்டாராம் ஷங்கரிடம்.

மெகா இயக்குனர் ஷங்கர், மகா தயாரிப்பாளர் ஏவி.எம்., சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜிகா இசையமைப்பாளர்ஏ.ஆர்.ரஹ்மான். இத்தனை பெரும் தலைகளும் சேர்ந்திருப்பதால் சிவாஜி படத்திற்கு எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாகியுள்ளது.

படம் கிட்டத்தட்ட முடியும் நிலைக்கு வந்து விட்டது. டாக்கி போர்ஷன் எனப்படும் வசனக் காட்சிகள் முக்கால்வாசியைமுடித்து விட்டார் ஷங்கர். இன்னும் கொஞ்சம்தான் பாக்கி உள்ளதாம்.

விரைவில் அப்பா ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை அமெரிக்காவில் படமாக்க உள்ளனர். அமெரிக்காவில் படப்பிடிப்பு நடத்தஇன்னும் அனுமதி கிடைக்கவில்லையாம். கிடைத்ததும் பறக்க உள்ளனர்.

அதுவரை இருக்கும் இடைவெளியில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு ரஜினி டப்பிங் பேசி வருகிறார். ஏவி.எம்.ஸ்டுடியோவில் உள்ள டப்பிங் தியேட்டரில் இந்த வேலை கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது.

ஏற்கனவே விவேக், மணிவண்ணன், வடிவுக்கரசி ஆகியோர் பேசி முடித்து விட்டனர். இப்போது ரஜினி பேசி வருகிறார். டப்பிங்பேச வந்த ரஜினி, காட்சிகளைப் பார்த்து விட்டு அசந்து விட்டாராம்.

படு அற்புதமாக வந்திருப்பதாக ஷங்கரைப் பாராட்டினாராம். சில காட்சிகளைப் பார்த்து விட்டு அட, இது நான்தானா என்றுவியந்தாராம். சண்டைக் காட்சிகளை படமாக்கியிருந்த விதமும் ரஜினிக்குப் பிடித்துப் போய் விட்டதாம்.

இந்தப் படம் எனக்கும், தமிழ் சினிமாவுக்கும் பெரிய மைல் கல்லாக இருக்கும் என்று நெருங்கியவர்களிடம் சொல்லிச்சந்தோஷப்பட்டு வருகிறார் ரஜினி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil