»   »  ரஜினியின் ஹரா

ரஜினியின் ஹரா

Subscribe to Oneindia Tamil

ரஜினி பற்றிய அனிமேஷன் படத்தை எடுத்து வரும் மகள் செளந்தர்யா, இது தனது தந்தைக்கு செலுத்தும் நன்றிக்கடன் என்று நெகிழ்வாக கூறுகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இப்போது உலகளாவிய மார்க்கெட் ஏற்பட்டு விட்டது. அவரது படங்கள் இந்தியாவைத்தாண்டி அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ் என பல நாடுகளிலும் சக்கை போடு போடுகிறது. 20 வருடங்களுக்குமுன்பு ரஜினி நடித்த மசாலா மிக்ஸ் பில்லாவை பிரான்ஸில் திரையிட போட்டி ஏற்பட்டுள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இப்போது ரஜினியை வைத்து முற்றிலும் வித்தியாசமான ஒரு அனிமேஷன் படத்தை இளைய மகள் செளந்தர்யாஉருவாக்கி வருகிறார். கிட்டத்தட்ட ரூ. 10 கோடி பட்ஜெட்டில் இப்படத்தை உருவாக்குகிறார் செளந்தர்யா.

அனிமேஷனில் ஏற்கனவே கலக்கி வருபவர் செளந்தர்யா. அன்பே ஆருயிரே, சந்திரமுகி என சில படங்களுக்குஅவர்தான் டைட்டில் மற்றும் அனிமேஷன் செய்து தந்தார். இப்போது தனது அப்பாவின் கேரக்டரை வைத்துஹரா என்ற பெயரில் அனிமேஷன் படத்தைஉருவாக்குகிறார்.

இது ஒரு சாதாரண கார்ட்டூன் படமாக இருக்காது. ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த, திரில்லிங்கான கம்ப்யூட்டர் கேம்போல இருக்குமாம். ஹரா என்றால் என்ன என்று கேட்டால், ஹரிஹரா என்பதன் சுருக்கமே ஹரா.

செளந்தர்யாவின் இந்த முயற்சிக்கு ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆட் லாப்ஸ் நிறுவனம் கரம் கொடுத்துள்ளது.இதை வாழ்க்கை வரலாற்றுப் படமாக செளந்தர்யா எடுக்கவில்லையாம். இது ஒரு வித்தியாசமான ரஜினி படமாகஇருக்கும் என்பது செளந்தர்யாவின் கூற்று.

அப்பா கேரக்டருக்கு செளந்தர்யாதான் குரல் கொடுக்க உள்ளாராம். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைக்கிறார்.காமெடிக் காட்சிகளும் உண்டாம், சென்டிமென்ட் காட்சிகளும் உண்டாம். அனல் பறக்கும் சண்டைக் காட்சிகளும்இருக்கிறதாம்.

எப்படி இப்படி ஒரு ஆசை என்றால், எனக்கு படம் வரைவதில் ரொம்ப ஆர்வம். இப்போதும் கூட நான் ஏதாவதுவரைந்து கொண்டேதான் இருப்பேன். பிறகு கம்ப்யூட்டரில் வரைய ஆரம்பித்தேன். அப்படியே கிராபிக்ஸ் ஆசைவந்து விட்டது என்று கூறும் செளந்தர்யா, ஆக்கர் ஸ்டுடிேயாஸ் என்ற பெயரில் தனது கிராபிக்ஸ்ஸ்டுடியோவையும் நிர்மாணித்துள்ளார்.

ஹராவில், ரஜினியை வைத்து காமெடி, கீமடி செய்யலையே என்றால் சூப்பர் ஸ்டாரைப் போல கம்பீரமாகசிரிக்கிறார் செளந்தர்யா. அப்பாவை வைத்து படம் செய்ய நிறையப் பேர் காத்திருக்கிறார்கள். ஆனால் எனக்குஅப்பாவை வைத்து வித்தியாசமாக எதையாவது செய்ய ஆசை வந்தது.

எனக்கு அவர் கடவுள் போல. நான் அவரின் தீவிர பக்தை. அவர் நான் கேட்ட எல்லாவற்றையும் வாங்கிக்கொடுத்துள்ளார். அவருக்காக நாம் என்ன செய்யலாம் என நான் பலமுறை யோசித்துள்ளேன். அதன்விளைவுதான் இந்த ஹரா. இது அப்பாவுக்கு நான் செலுத்தும் நன்றிக் கடன், பரிசு என்கிறார் நெகிழ்வாகசெளந்தர்யா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil