»   »  அசத்திய அமீர், அசந்த ரஜினி!

அசத்திய அமீர், அசந்த ரஜினி!

Subscribe to Oneindia Tamil

பருத்தி வீரன் படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் அமீர் இயக்கிய விதத்தைப் பார்த்து அசந்து போய், போனில் அமீரைப்பிடித்து பாராட்டித் தள்ளிவிட்டாராம்.

இயக்குநர் அமீரின் முத்துப் படம் பருத்தி வீரன். பார்த்து பார்த்து இழைத்து எடுத்துள்ள இப்படம் பல்வேறு சிக்கல்களைத் தாண்டி ரிலீஸ்ஆகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினி இப்படத்தை பார்க்க வேண்டும் என்று விரும்பியதால், அவருக்காக பிரத்யேக காட்சிக்கு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

ரஜினிக்காக ஃபோர் பிரேம்ஸ் பிரிவியூ தியேட்டரில் பருத்தி வீரன் பிரிவியூவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரஜினி, மனைவி லதா, மகள்கள்ஐஸ்வர்யா, செளந்தர்யா ஆகியோருடன் படம் பார்க்க வந்தார். மாலை 6.30 மணிக்கு உள்ளே நுழைந்த ரஜினி குடும்பத்தோடு படத்தைப் பார்த்துரசித்தார்.

படத்தைப் பார்த்து முடித்த ரஜினியின் கண்களில் பிரமிப்பையும், வியப்பையும் காண முடிந்தது. தனது ஸ்டைலில் சட்டென்று போனை எடுத்துஅமீரை பிடித்தார்.

மிகப் பிரமாதமாக எடுத்துள்ளீர்கள். திரைக்கதை அமைப்பில் பின்னியுள்ளீர்கள். உங்களுக்கு தேசிய விருது நிச்சயம் கிடைக்கும், வாழ்த்துக்கள்என்று கூறி அமீரை மனதார பாராட்டினார்.

அப்படியே அருகில் நின்ற ஹீரோ கார்த்தியையும் ரஜினி வெகுவாகப் பாராட்டினார். புதுமுக ஹீரோ போலவே நடிக்கவில்லை, எக்ஸல்லன்ட்நடிப்பு என்று கூறி கட்டித் தழுவினார் ரஜினி.

அப்படியே சிவக்குமாரையும் ஒரு வார்த்தை பாராட்டி விட்டு குடும்பத்தோடு கிளம்பிச் சென்றார் ரஜினி.

Please Wait while comments are loading...