ரஜினிக்கு புது கெளரவம்
இந்தியாவின் 50 பவர்ஃபுல் பிரபலங்கள் பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் இடம் பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் முன்னணி பிசினஸ் இதழ் பிசினஸ் வீக். இந்த இதழ், இந்தியாவின் 50 பவர்ஃபுல் பிரபலங்களைப் பட்டியலிட்டுள்ளது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த 50 பேர் இதில் இடம்பெற்றுள்ளனர். இதில் ரஜினிக்கும் இடம் கிடைத்துள்ளது.ரஜினிகாந்த்தை, தென்னிந்திய சினிமாவின் மன்னன் என்றும், தென்னிந்திய சினிமாவை நிர்ணயிக்கும் சக்தியாகவும் வர்ணித்துள்ளது பிசினஸ் வீக்.
ரஜினி தவிர மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் கமல்நாத், விமானத்துறை அமைச்சர் பிரபுல் படேல், முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஷியாம் சரண், தொழிலதிபர்கள் ரத்தன் டாடா, முகேஷ் அம்பானி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், கிரிக்கெட் நட்சத்திரங்கள் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், ஆடை வடிவமைப்பாளர் ரித்து குமார் உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளனர்.
அமிதாப் அம்பானி ஐஸ்வர்யா ராய் கமல்நாத் சச்சின் டாடா டிராவிட் தமிழ்சினிமா தென்னிந்தியா பிசினஸ் வீக் பெருமை மன்னன் ரஜினி business week dravid kamalnath mannan rajini sachin south india


Click it and Unblock the Notifications