ஹீரோ .. ஹீரோ ..
சேலம்:
ரஜினிகாந்த்தின் பலத்தைத் தெரிந்து கொள்வதற்காக அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் கையெழுத்துவேட்டை நடத்தி வருகின்றனர்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரி வருகின்றனர். ஆனால் அவர் குழப்பமானபதிலையே அளித்து வருகிறார். படங்களில் நடிக்கும்போது அரசியல் வசனங்களை, சூடு பறக்க பேசுகிறார்.ஆனால் அரசியலுக்க வர மாட்டேன் என தனது ரசிர்களிடமும், தன்னை சந்திக்கும் அரசியல் தலைவர்களிடமும்தெரிவித்து வருகிறார்.
ரஜினிகாந்த்தின் இந்த குழப்பமான நிலையால் விரக்தியுற்ற ரசிகர்கள் சமீபத்தில் ரஜினி அரசியல் கட்சியைத் துவக்கவேண்டும் என்று கோரி போஸ்டர்கள் ஒட்டினார்கள். அந்த கையோடு இப்போது கையெழுத்து வேட்டையில்அவர்கள் இறங்கியுள்ளனர்.
சேலத்தில் சமீபத்தில் தமிழக ரஜினிகாந்த் பட்டதாரிகள் நல பேரவை என்ற பெயரில் ரசிகர்கள் கூட்டம் நடந்தது.இதன் தலைவர் நாக சுருளிவேல் என்பவர் தலைமை தாங்கினார். இதில், ரஜினி கட்சி துவங்க வேண்டும் என்றுதீர்மானம் நிறைவேற்றி ரசிகர் மன்ற தலைமைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கம்போலவே, இதற்கு எதிர்ப்போ,ஆதரவோ தெரிவிக்கப்படவில்லை.
இதையடுத்து ரஜினி தங்களது முடிவுக்கு ஆதரவாக இருப்பதாக கருதிக் கொண்டு, தமிழகம் முழுவதும், உறுப்பினர்சேர்க்கையை ரசிகர்கள் துவக்கியுள்ளனர். இது, ரஜினி எதிர்காலத்தில் துவங்கப் போகும் கட்சிக்க்கான உறுப்பினர்சேர்க்கை என்று அவர்கள் கூறுகின்றனர்.
இதுதவிர கையெழுத்து வேட்டையும் நடத்தி வருகிறார்கள். ரஜினி கட்சி துவக்க வேண்டும் என்று விரும்புபவர்கள்இந்த ரசிகர்கள் நடத்தும் கையெழுத்து வேட்டையில் கையெழுத்திடலாமாம். அப்படிக் கையெழுத்துபோடுபவர்களுக்கு புதிதாக உறுப்பினர் அட்டை வழங்கப்படும். அதுவே கட்சி உறுப்பினர் அட்டையாககருதப்படுமாம்.
இந்த கையெழுத்துக்களை வைத்துக் கொண்டு ரஜினியை கட்சி ஆரம்பிக்கச் சொல்லி கேட்கப் போகிறார்களாம்ரசிகர்கள்.
மூப்பனார் போலவே எந்த முடிவும் எடுக்காமல் எப்போதும் நழுவி வரும் ரஜினி காந்த் இந்த முறையாவது,தனக்காக உயிரைக் கொடுத்து பாடுபடும் ரசிகர்களின் உணர்வுகளை மதிப்பாரா என்று பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











