twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிவாஜி.. அடுத்த வருடம் தான் சிவாஜி படத்தின் செகண்ட் ஷெட்யூல் சூட்டிங்கும் மடமடவென நடந்து முடிந்துவிட்டது. ரஜினிக்கு கொஞ்சம் ரெஸ்ட்கொடுத்துவிட்டு அமெரிக்காவுக்குப் பறந்திருக்கிறார் ஷங்கர்.கேட்டால், சும்மா பர்சனலா போயிருக்காரு என்று அவரது அலுவலத்தில் சொல்கிறார்கள். சிவாஜி படத்தின் பாடல் காட்சிகளுக்குலொக்கேஷன் பார்க்கவும் அப்படியே ரிலாக்ஸ் செய்து கொள்ளவும் போயிருப்பதாகத் தெரிகிறது.அந்நியன் படத்தில் டூலிப் மலர்த் தோட்டத்தை அப்படியே கண்ணுக்குள் கொண்டு வந்தாரே, அதைவிட அட்டகாசமான ஒருலொக்கேஷனை தேடுகிறாராம் ஷங்கர்.ரஜினியே என்றாலும் வேலை வாங்குவதில் ஷங்கர் மிக ஸ்டிரிக்ட் ஆகவே உள்ளாராம். ஹைதராபாத்தில் நடந்தசூட்டிங்கின்போது ரஜினியை 3, 4 முறை ஒரே ஷாட்டில் நடிக்க வைத்தாராம். பெர்பெக்ஷன் வரும் வரை விடவில்லையாம்.ரஜினியாவது பரவாயில்லை, ஷ்ரியா பாடு தான் படு திண்டாட்டமாம். சில காட்சிகளில் அவர் 20 டேக்குகள் வரைவாங்கினாராம். பெண்டு நிமிர்த்தினாலும் கடைசியில் அந்தக் காட்சியை ஓட விட்டுப் பார்க்கும்போது எல்லோர் முகத்திலும் பிரகாசம்வந்துவிடுகிறதாம்.இப்படியாக சிற்பி சிலை செதுக்குவது மாதிரி படத்தை உருவாக்கி வரும் ஷங்கர், படத்தை இந்த வருடம் ரிலீஸ் செய்யப்போவதில்லையாம். அடுத்த வருடம் தான் சிவாஜி படம் திரைக்கு வருமாம்.ரஜினி ரசிகர்கள் ரொம்பவே பொறுமையை கடைபிடித்தாக வேண்டும். படத்துக்காக ஏவிஎம் நிறுவனம் கவலைப்படாமல்கோடிகளைக் கொட்டிக் கொண்டிருக்க, ஷங்கரோ இரவு பகல் பாராமல், கதையில் எதாவது புது ஐடியாவை சேர்த்தபடிஇருக்கிறாராம் ஷங்கர்.கதை பற்றிக் கட்டால், ஷங்கர் தரப்பில் தரப்படும் பதில் இதோ: சிவாஜி கதையை பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகபத்திரிக்கைகளில் எழுதுகிறார்கள். ஆனால் படம் வெளி வர இன்னும் ஒரு வருடம் ஆகும். அப்போது தான் இந்த கதை தெரியவரும். இப்போதே கதையை சொல்லிவிட்டால் ரசிகர்கள் அதை படித்து படித்து அலுப்பு தட்டிவிடும். அதனால் தான் கதையைரகசியமாக வைத்துள்ளோம் என்கிறார் ஷங்கர். பிட்டு:நல்ல கதையோடு வரும் இளைஞர்களுக்கு ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கதவுகள் திறந்தே உள்ளதாம். நல்லகதை வைத்துள்ள இளைஞர்கள் தாராளமாக ஷங்கரை அணுகலாம்.பிட்டுக்கே பிட்டு:சிவாஜி படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிடும் உரிமையை ரூ. 10 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறார் என்.வி.பிரசாத்.தமிழில் வெளியாகும் அதே நாளில் தெலுங்கிலும் படம் ரிலீஸ் ஆகுமாம்.

    By Staff
    |

    சிவாஜி படத்தின் செகண்ட் ஷெட்யூல் சூட்டிங்கும் மடமடவென நடந்து முடிந்துவிட்டது. ரஜினிக்கு கொஞ்சம் ரெஸ்ட்கொடுத்துவிட்டு அமெரிக்காவுக்குப் பறந்திருக்கிறார் ஷங்கர்.

    கேட்டால், சும்மா பர்சனலா போயிருக்காரு என்று அவரது அலுவலத்தில் சொல்கிறார்கள். சிவாஜி படத்தின் பாடல் காட்சிகளுக்குலொக்கேஷன் பார்க்கவும் அப்படியே ரிலாக்ஸ் செய்து கொள்ளவும் போயிருப்பதாகத் தெரிகிறது.

    அந்நியன் படத்தில் டூலிப் மலர்த் தோட்டத்தை அப்படியே கண்ணுக்குள் கொண்டு வந்தாரே, அதைவிட அட்டகாசமான ஒருலொக்கேஷனை தேடுகிறாராம் ஷங்கர்.

    ரஜினியே என்றாலும் வேலை வாங்குவதில் ஷங்கர் மிக ஸ்டிரிக்ட் ஆகவே உள்ளாராம். ஹைதராபாத்தில் நடந்தசூட்டிங்கின்போது ரஜினியை 3, 4 முறை ஒரே ஷாட்டில் நடிக்க வைத்தாராம். பெர்பெக்ஷன் வரும் வரை விடவில்லையாம்.

    ரஜினியாவது பரவாயில்லை, ஷ்ரியா பாடு தான் படு திண்டாட்டமாம். சில காட்சிகளில் அவர் 20 டேக்குகள் வரைவாங்கினாராம்.


    பெண்டு நிமிர்த்தினாலும் கடைசியில் அந்தக் காட்சியை ஓட விட்டுப் பார்க்கும்போது எல்லோர் முகத்திலும் பிரகாசம்வந்துவிடுகிறதாம்.

    இப்படியாக சிற்பி சிலை செதுக்குவது மாதிரி படத்தை உருவாக்கி வரும் ஷங்கர், படத்தை இந்த வருடம் ரிலீஸ் செய்யப்போவதில்லையாம். அடுத்த வருடம் தான் சிவாஜி படம் திரைக்கு வருமாம்.

    ரஜினி ரசிகர்கள் ரொம்பவே பொறுமையை கடைபிடித்தாக வேண்டும். படத்துக்காக ஏவிஎம் நிறுவனம் கவலைப்படாமல்கோடிகளைக் கொட்டிக் கொண்டிருக்க, ஷங்கரோ இரவு பகல் பாராமல், கதையில் எதாவது புது ஐடியாவை சேர்த்தபடிஇருக்கிறாராம் ஷங்கர்.

    கதை பற்றிக் கட்டால், ஷங்கர் தரப்பில் தரப்படும் பதில் இதோ: சிவாஜி கதையை பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகபத்திரிக்கைகளில் எழுதுகிறார்கள். ஆனால் படம் வெளி வர இன்னும் ஒரு வருடம் ஆகும். அப்போது தான் இந்த கதை தெரியவரும். இப்போதே கதையை சொல்லிவிட்டால் ரசிகர்கள் அதை படித்து படித்து அலுப்பு தட்டிவிடும். அதனால் தான் கதையைரகசியமாக வைத்துள்ளோம் என்கிறார் ஷங்கர்.


    பிட்டு:

    நல்ல கதையோடு வரும் இளைஞர்களுக்கு ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கதவுகள் திறந்தே உள்ளதாம். நல்லகதை வைத்துள்ள இளைஞர்கள் தாராளமாக ஷங்கரை அணுகலாம்.

    பிட்டுக்கே பிட்டு:

    சிவாஜி படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிடும் உரிமையை ரூ. 10 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறார் என்.வி.பிரசாத்.தமிழில் வெளியாகும் அதே நாளில் தெலுங்கிலும் படம் ரிலீஸ் ஆகுமாம்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X